Tag: அழகேச பாண்டியன்

எழுத்து

புதிய கல்விக் கொள்கை – அழகேச பாண்டியன்

அழகேச பாண்டியன் · 24.08.20

மோடி அரசின் “மகத்தான” சாதனைகளில் முதன்மையானது, அடுக்குமொழியில் கவர்ச்சிகரமான, அலங்கார வார்த்தைகளையும், முழக்கங்களையும் உருவாக்கியதேயாகும். 2014 வரை மோடி மட்டுமே பிரயோகித்து வந்த சொற்றொடர்கள் – பின்னாளில் அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பரந்து விரிந்து தற்சமயம் அரசின் முக்கிய அங்கமாகிவிட்டன. தொழிற்முறை விளம்பர நிபுணர்கள் வழியே புதுப்புது வாசகங்கள், முழக்கங்கள், பிரகடனங்கள் போன்றவை நாள்தோறும் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அடுக்குமொழி அரசை அதன்வழியிலேயே புரிந்துகொள்வதே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் இந்த அரசை ‘3D சர்க்கார்’ என்கிறார் […]

எழுத்து

நீண்ட நெடிய போரின் தொடக்கம் – அழகேசப் பாண்டியன்

அழகேச பாண்டியன் · 27.12.19

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து   நாடெங்கும் நடக்கும் போராட்டங்களின் தாக்கம் அதன் தொடக்க நிலையில் இருந்த போதும், சில குறிப்பிடத்தக்க மாறுதல்களை உருவாக்கி இருக்கின்றன. திரில்லர் திரைப்படம் ஒன்றின் இறுதிக் காட்சியில் முடிச்சுகள் விறுவிறுவென அவிழ்வதைப் போலவும், அவிழ்ந்து கொண்டிருக்கும் போதே பார்வையாளன் தான் இருக்கும் அறை விஷ வாயுவால் நிரப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அங்கிருந்து மீட்கப்பட்டு, வெளிக்காற்றை சுவாசிப்பதற்கு ஒப்பான பீதியும், நிம்மதியும் ஒன்றாய்க் கலந்த உணர்வு. […]

எழுத்து

இந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும்

அழகேச பாண்டியன் · 20.04.19

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த நியோ லிபரல் பொருளாதார பரிசோதனை தற்போது போக்கிடம் இன்றி தரை தட்டி நிற்கிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், இந்தியாவின்  ஜிடிபி ஆறு மடங்கு வளர்ந்திருக்கிறது. முழு வறுமை (absolute poverty) மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நியச் செலவாணி கையிருப்பு அதிகரித்திருக்கிறது. நுகர்வு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. பொருளியலாளர் அமித் பசோலேவின் வரிகளில் சொன்னால் மால், மொபைல்,மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் பிரமாதாமாக வளர்ந்திருக்கின்றன. ஆனால் இதே காலகட்டத்தில், அரசு அத்தியாவசிய […]