Tag: வி.அமலன் ஸ்டேன்லி

எழுத்து

அந்த நீர்தான், அதே நீரன்று: வி.அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ 

மானசீகன் · April 25, 2021

நவீன மனிதனின் மெய்யியல் தேடல்களை விவரிக்கும் நாவல்கள் தமிழில் பெரிய அளவில் இல்லை. சிலர் உடனே ‘ பொய்த்தேவில்’ வரும் சோமு முதலியைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். லௌகீகத்தின் தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் துறவையோ அல்லது அதற்கு நிகரான காவி வேஷத்தையோதான் தமிழின் பல நாவல்கள் ஆன்மீகம் என்ற பெயரில் பேசியிருக்கின்றன. ஜெயகாந்தன் காவியை உடுத்தியவுடனே ஒருவனைச் சகலமும் அறிந்த ஞானியாக்கி விடுவார். அந்தச் சாமியாரின்/ பைத்தியக்காரனின் ஆணவம் நிரம்பிய அலட்டலான சவுக்கடிக்கு முன் சாதாரண மனிதன் ஒடுங்கி […]

எழுத்து

முருகிற் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல்மடவீர்

வி.அமலன் ஸ்டேன்லி · January 25, 2021

உற்ற நண்பனிடம்கூடப் பகிர முடியாமல் போன அக்காதலை என்னவென்று சொல்ல? அக்கா என்றே அவளை அழைத்து வந்தேன். கிஞ்சித்தும் அப்படியொரு கெடுசிந்தை ஆரம்பத்திலில்லை. சத்தியமாக. பரிதாபத்தில் தொடங்கி பரிதவிப்பில் முடிந்தது. தேவி பத்மாவதி கணக்குப் பாடத்தில் முழுதாய் நூறு எடுப்பவள். என் கணக்கு நோட்டைப் படித்துப் பார்க்கிறேன் என்று எடுத்து வைத்துக்கொண்டதன் அர்த்தம் முழுதாய்ப் புரிய இரண்டு மூன்று மாதங்களாயின. என்னை ஆங்கில இலக்கணம் கற்றுக்கொடுக்கப் பணித்தாள். தொன் போஸ்கோ பள்ளியில் பாதிரிமார்கள் ஆங்கில இலக்கணம் நன்றாகச் சொல்லித் […]

எழுத்து

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்

வி.அமலன் ஸ்டேன்லி · September 25, 2020

மிக நெடிய தேடல். எதிர்ப்பட்ட அனைத்திலும் மிகத் தீவிரத்துடன். விவேகானந்தர், வேதாந்தம், உபநிடதங்கள், ஓஷோ, ஜேகே, ரமணர் என்று. பதஞ்சலி யோகசூத்திரம் ஆழ்ந்துபோக வைத்தது. ஒரு பொறியாளரிடமுள்ள பழுதுபார்க்கும் கருவிப்பெட்டி போன்றது இவ்வழிகாட்டிகளின் போதனைகள். ஒவ்வொரு மகான்களும் வேறுபட்டதொரு கருவிபோல. சுத்தியல்போல ஓஷோ உள்ளே இறுகிப்போனதை உடைக்க உதவினார். ஒவ்வொரு கருவிக்கும் ஒரு குறிக்கோளுண்டு. ஜேகே திருப்புளி அல்லது மரைகழற்றி. கோட்பாடுகளோ கருத்தியலோ அன்றி வார்த்தைக்கு அப்பாற்பட்டதை மொழிக்குள் வரிக்கப் பார்த்தவர். ஜேகேயின் நூல்களை ஆரம்பகால பெளத்தத் துறவிகளுக்கு மனவிழிப்புநிலை […]

எழுத்து

விழிப்புணர்வின் பாதை

வி.அமலன் ஸ்டேன்லி · September 25, 2020

சித்தார்த்தருக்கு உணவை எடுத்து வந்தாள் சுஜாதா. அரசமரத்தடியில் அவர் இளங்காலைப் பொழுதில் எழிலார்ந்து அமர்ந்திருந்தார். அவரின் உடலும் முகமும் சாந்தத்தையும், உவப்பையும், உள்ளச் சமநிலையையும் காட்டின. கம்பீரமும் ஆழமைதியும் கொண்ட அவரை அரச மரத்தடியில் பலமுறை அவள் கண்டிருந்தபோதும் அன்றைய நாள் அவர் வெகுசிறப்புடன் காணப்பட்டார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் அவளது துயரமும் வருத்தமும் ஒழிந்துபோயின. இளந்தென்றலென மகிழ்ச்சி அவள் இதயத்தை நிறைத்தது. இப்பூமியில் தனக்கு வேறெதுவும் தேவையாயிருக்கவில்லை என்றுணர்ந்தாள். இப்பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் நன்றெனவும் உதவிகரமாக இருப்பதாகவும், […]

எழுத்து

புத்தர் ஞானத்தில் கண்டடைந்தது என்ன?

வி.அமலன் ஸ்டேன்லி · August 24, 2020

அரசயிலை அரச மரத்தினடியில் அமர்ந்த துறவி கௌதமர் தனது ஒட்டுமொத்த மனவொருமிப்பு ஆற்றலால் தன்னுடலை ஆழ்ந்து உள்முகமாக நோக்கினார். தன்னுடலின் ஒவ்வொரு அணுவையும் முடிவற்றுப் பாயும் பிறப்பு, வாழ்வு, இறப்பு எனும் ஆற்றின் ஒரு துளியாகக் கண்டார். மாறாதவொன்றென எதுவும் அவ்வுடலில் இல்லை என்றும் தனித்ததொரு சுயமென எதுவுமில்லை எனவும் உய்த்தறிந்தார். உடலெனும் ஆற்றில் ஒன்றறக் கலந்தபடி உணர்ச்சிகள் எனும் வெள்ளமும் ஓட, ஒவ்வொரு உணர்ச்சியும் அவ்வாற்றின் ஒரு துளியாக இருப்பதைக் கண்டார். அத்துளிகள் பிறப்பு, வாழ்வு, […]

எழுத்து

விபஸ்ஸனா

வி.அமலன் ஸ்டேன்லி · July 20, 2020

அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ நாவலிலிருந்து ஓர் அத்தியாயம் * பல்லாவரம் வழியே தோல் தொழிற்பேட்டை செல்லும் சாலையில் கைனடிக் ஸ்கூட்டர் ஓடியது. அப்போதுதான் மழைபெய்து ஓய்திருந்தது. கடும் மழையால் பள்ளங்கள் நீரால் முடியிருக்க மிக கவனம் காட்ட வேண்டியிருந்தது. ஓடுபாதையில் அப்பகுதிக்கே உரித்தான தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் தோலும் வேதிப்பொருளும் கலந்த மணம். ஏறத்தாழ ஒரு குடிசைத் தொழில் மாதிரி இப்பகுதியில் தோல் பதனிடுதல் நடைபெற்று வருகிறது. ஓரிரு மாட்டுத்தோல்கள் தொங்க விடப்பட்டிருந்தன […]