எழுத்து
அன்பின் வழியது
‘அப்பாடா என்ன வெயில்’ என்று அலுத்தபடியே குறட்டுப் படியேறிய சபாபதிப் பிள்ளை தலையிலிருந்து துண்டை அவிழ்த்து உதறியபடி வாசற்படியில் செருப்பைக் கழற்றிவிட்டு ‘பர்வதம்’ என்று குரல் கொடுத்தார். கூடவே ‘ஒரு சொம்புல தண்ணி கொண்டா’ என்றார். சற்று நேரத்தில் பர்வதம் செம்பில் நீருடன் வெளியே வந்தாள். செம்பை வாங்கி முகத்தை கைகால்களைக் கழுவியபடி ‘இன்னைக்காவது மணியார்டர் வந்துதா’ என்று கேட்டார். ‘மணியார்டர் தானே, வந்துட கிந்துடப் போவுது’ என்று வேண்டாவெறுப்பாகச் சிடுசிடுப்போடு பதிலளித்துவிட்டு செம்பை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். […]
