Tag: ஆபரணம்

எழுத்து

தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 11): துலா முள்ளின் அசைவுகள் – பா.திருச்செந்தாழையின் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · December 24, 2021

ஒழுங்கான கோடுகள் கொண்ட ஒரு பக்கத்தில் சற்றே கோணலாக வளைந்திருக்கும் கோடு உடனடியாக எல்லோரது கவனத்தையும் கவரும். ஒருவழிப்பாதையில் எதிரில் வரும் ஒழுங்கு மீறிய வாகனம் அனைவரையும் பதற்றத்துக்கு உள்ளாக்கும். மீறல்கள் உருவாக்குகிற சமன்குலைவை முதன்மைப்படுத்தும் கதைகளுக்கென்று இலக்கியத்தில் தனித்த செல்வாக்கு எப்போதுமே உண்டு. ஒருவகையில் இலக்கியத்தின் பணி அத்தகைய மீறல்களையும் அதற்கான காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும் யோசிக்கச் செய்வதுதான்.  ‘உலகமே ஒரு நாடக மேடை’ என்ற சொற்றொடருக்கு நிகரான செல்வாக்கு கொண்ட இன்னொரு கூற்று ‘எல்லாவற்றுக்கும் ஒரு […]

எழுத்து

ஆபரணம்

பா.திருச்செந்தாழை · August 29, 2021

சிறிய ஆற்றுப்பாலத்தைத் தாண்டிய அம்பாஸிடர், இருபுறமும் வாழை மரங்கள் நிறைந்திருக்கும் தோப்பு வழியாக மெதுவாக முன்னேறியது. முழங்காலளவு ஆற்றுநீருக்குக் கீழே விரிந்திருந்த தூய வெண்மணற் பரப்பைப் பார்த்தபடி வந்த மரியத்தின் கண்கள் இந்தத் திடீர் பச்சைய உலகிற்குள் சட்டென மயங்கித் தவழ்ந்தன. காளியப்பன், டிரைவருக்கு அருகே அமர்ந்து வழி சொல்லிக்கொண்டிருந்தார். மரியத்தின் அருகே உலர்ந்த நரைமுடிகள் பறக்கத் திரவியம் உறங்கிக்கொண்டிருந்தான். காலில் போடப்பட்டிருந்த பேண்டேஜின் மீது மஞ்சளான மருந்துக் களிம்பு தடம் போட்டிருந்தது. திரவியத்தின் காலில் நரம்புகள் […]