Tag: க. மோகனரங்கன்

எழுத்து

உன் யாதுமாகிய நான்

க. மோகனரங்கன் · January 30, 2023

அடர்ந்த கானகத்தின் நடுவே – ரியோகன் அடர்ந்த கானகத்தின் நடுவே அமைந்திருக்கிறது எனது குடிசை; அங்கே ஆண்டுதோறும் நீண்டுவளர்கின்றன பசுமையான கொடிகள்; அரிதாக ஒலிக்கும் விறகுவெட்டியின் பாடல்களைத் தவிர, மனிதர்களைக் குறித்த கதைகள் ஏதும் காதில் விழுவதில்லை; சூரியன் பிரகாசிக்கும்போது எனது உடைகளைச் சீர்செய்கிறேன்! நிலவு ஒளிரத் தொடங்குகையில் கவிதைகளை வாசிக்கிறேன்! அர்த்தத்தை நீங்கள் அறிய விரும்பினால், அவற்றைத் துரத்திப்போவதை நிறுத்திவிடுங்கள்! * சிறுவனும் முதியவரும் – ஷெல் சில்வர்ஸ்டீன் சிறுவன் சொன்னான், “சில நேரங்களில் நான் […]

எழுத்து

அன்னையிட்டத் தீ! – க. மோகனரங்கன்

க. மோகனரங்கன் · February 24, 2020

ஆசி வேண்டிப் பணிந்த வேந்தனை நோக்கிப் புன்னகைத்த துறவி சொல்கிறார்: “முதலில் உன் தந்தை இறப்பார்; பிறகு நீயும் சாவாய்; இறுதியாய் உன் மகன் மரிப்பான்.” கேட்டதும் குழம்பித் திகைத்த மன்னனை உடன்வந்த அமைச்சர் ஆற்றுப்படுத்துகிறார். “இப்புவியிலேயே பெரிய சோகம் புத்திர சோகம் தான். அது தங்கள் வம்சத்திற்கு நிகழாது என்றே அவர் வாழ்த்தியுள்ளார்.” மனம் தெளிந்த மன்னன் மறுபடியும் ஒருமுறை அவரை வணங்கிச் செல்கிறான். பழுத்த இலை உதிரும் போது இயற்கையின் நியதி இதுவெனத் தேற்றிக் […]

எழுத்து

க. மோகனரங்கன் கவிதைகள்

க. மோகனரங்கன் · December 15, 2018

பேய்க்கரும்பு உங்களுக்குத் தெரியாது! அப்போது பார்க்கவும் பழகவும் இயலாதபோது எண்ணவும் ஏங்கவும் அத்தனைத் தித்திப்பாக இருந்தாள் . கிட்டாது கிட்டியதொரு தனிமையில் அவளது காதோடு வாய் கூட்டி கட்டிக்கரும்பே என முணுமுணுத்தேன். கேட்டும் கேளாததுபோல முகம்திரும்பியவள் கிறுக்கா உனக்கென கேலியாகச் சிரித்தாள் அவ்வளவு மதுரமான சிரிப்பை அடுத்தும் பார்க்க வாய்க்கவில்லை. இடையில் எழுதவும் கசப்பாய் ஏதேதோ நிகழ்ந்துவிட்டது . அலட்சியமாய் அள்ளியெடுத்து , எதிரெதிராக சுழலும் இரும்புச் சக்கரங்களுக்கு நடுவே நுழைத்து பிழிந்து உலரச் செய்த விதியின் […]

எழுத்து

குரங்கு வளர்க்கும் பெண் – லியோனார்டு மைக்கேல்ஸ்

க. மோகனரங்கன் · August 13, 2018

பியர்டு தனது விவாகரத்துத்திற்குப் பிறகான அவ்வருடத்தின் இளவேனிற் பருவத்தில், தனியாக ஜெர்மனியில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது இங்கர் என்ற இளம் விலைபெண்ணிடம் காதலில் வீழ்ந்தவன், தொடர்ந்து மேற்கொள்ளவிருந்த தனது பயணத்திட்டங்களை ரத்துசெய்தான். அவர்கள் இரண்டு தினங்களை, பெரும்பாலும் பியர்டின் விடுதி அறையிலேயே ஒன்றாகக் கழித்தனர். பகலிலும் இரவிலும் சாப்பிடுவதற்காக மட்டும் அவளை உணவகங்களுக்கு அழைத்துச் சென்றான். மூன்றாம்நாள் இங்கர் தனக்கு சற்று அவகாசம் தேவைப்படுவதாக பியர்டிடம் கூறினாள். பியர்டு வருவதற்கு முன்பு அவளுக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. […]