Tag: இராசேந்திர சோழன்

எழுத்து

சுழல்காற்றும் சருகுகளும்

இராசேந்திர சோழன் · July 20, 2020

சம்சாரம் ரொம்ப நச்சரித்ததின் பேரில் அவளோடு செங்கமோட்டுக்கு புறப்பட்டுப் போயிருந்தேன். அங்கே அவளுடைய அக்காள் இருக்கிறாளாம். வீட்டுக்கு விரோதமாய் ‘லவ் மேரேஜ்’ பண்ணிக் கொண்டு வாத்தியார் உத்தியோகம் பார்க்கும் அவரோடு புறப்பட்டுப் போனதிலிருந்து ஒருநாளும் பிறந்தவீட்டை எட்டிப் பார்த்ததே இல்லையாம். அழுத கண்ணீரோடு அவள் புறப்பட்டுப் போய் ஏழு வருஷம். இவளுக்கும் அக்காளைப் போய்ப் பார்க்க வாய்ப்பில்லை. வயசுக்கு வந்த பெண் எப்படி தனியே போவாள்? இவளுக்கென்று நானும் வந்து வாய்த்துவிடவே, “எப்பிடியிருக்குதோ பாவம்… ஒரு கடுதாசி […]

எழுத்து

நாய் வேஷம்

இராசேந்திர சோழன் · June 16, 2020

திகிலும் கலவரமும் சூழ சத்திரத்துத் திண்ணையில் சீட்டாடிக் கொண்டிருந்தான் இருசப்பன்.  போன ஆட்டமே ஒரு சீட்டில் போய் விட்டது. கையிலும் காசு போண்டி. இந்த ஆட்டமாவது காட்டினால் தான் தொடர்ந்து ஆட முடியும். நாலடி கட்டுக் கட்டியாகிவிட்டது. மூணடி கட்டும் ஒன்று பூர்த்தி. ஸ்பேட் நாலும் அஞ்சும் கையிலிருக்கிறது. மூணு வந்தாலும் சரி, ஆறு வந்தாலும் சரி. கையைக் காட்டி விடலாம். மேசை ரெண்டரை ரூபாய் வரும். அடுத்த ஆட்டம் போடலாம்.  ஆனால் அதற்குள் யாரும் கையைக் […]

எழுத்து

உளைச்சல்

இராசேந்திர சோழன் · May 16, 2020

இன்று வாக்கிங் போகவில்லை. குழந்தைக்கு உடம்பு சரியில்லை. மத்தியானத்திலிருந்து என்னமோ மாதிரியிருக்கிறான். பெரிய பையனுக்கு வந்ததைப் போலவே மாந்தமாம். அள்ளுமாந்தம், வயிற்றைத் தூக்கித் தூக்கிப் போடுகிறது. மனசு திகிலாயிருக்கிறது. அள்ளுமாந்தம் பரம்பரை வியாதியில்லையே, ஒரு குழந்தைக்கு வந்த மாதிரியே ஏன் இந்தக் குழந்தைக்கும் வரவேண்டும்? பழைய பயம், என்ன சோதனை… இதுக்கு இங்கிலீஷ் வைத்தியம் கிடையாதாமே… நாட்டு வைத்தியர்தான் வந்தார். எதுவோ கொஞ்சம் சூரணம் உள்ளுக்கு கொடுத்தாகிவிட்டது. வசம்பு சுட்டு இழைத்து, தொப்புளைச் சுற்றித் தடவியாகி விட்டது. […]