Tag: சரவணன் சந்திரன்

எழுத்து

மறிக்குட்டி

சரவணன் சந்திரன் · September 28, 2023

முருகனுக்கு அன்று ரொம்பவே அச்சலாத்தியாக இருந்தது. இந்தக் கருமங்கள் எல்லாம் சீக்கிரம் முடிந்துவிட்டால் தேவலை என்றும் தோன்றியது. ராக்கால பூஜையை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது தீவட்டி பிடித்தபடி ஒருவன் மெல்ல அசைந்தாடி வந்தான். தீவட்டிப் புகையை நாசியினுள் ஏந்தி வாங்கி ‘ஆஹா என்ன மணம்! ஆஹா என்ன மணம்!’ எனச் சொல்வார் வழமையாய். ஆனால் அன்றைக்கு ஒன்றுமே சொல்லவில்லை. கையைக் காலைத் தடவித் தூங்க வைக்க முயல்கிறார்களாம் என எண்ணிச் சிரித்துக்கொண்டார். அப்படியெல்லாம் தூங்க வைத்துவிட முடியுமா அவரை? […]

எழுத்து

விளம்பரம்

சரவணன் சந்திரன் · July 1, 2023

அப்போது நான் புதிய பணியில் சேர்ந்திருந்த சமயம். என்னுடைய அலுவலகத்தில் உடன்பணிபுரிகிறவர் வழியாகத் திருவல்லிக்கேணி மேன்சன் ஒன்றில் அறை எடுத்தேன். அதற்கு முன் நண்பர்களோடு இணைந்து ஒரு ஒண்டுக் குடித்தன அறையில் தங்கியிருந்தேன். ஊரில் விரிந்த தாழ்வாரம் கொண்ட வீட்டில் இருந்த எனக்கு அந்த அறைக்குள் மூச்சு முட்டியது. அழைத்துப்போன நண்பர் என்னுடைய மனநிலையைப் புரிந்துகொண்டார். “நல்லவேளை உதவியா வந்தீங்க. இல்லாட்டி இந்தப் பொந்துக்குள்ள மூச்சு முட்டிச் செத்திருப்பேன்” என்றேன் அவரிடம். “இப்ப போறதுமே பொந்துதான். ஆனா […]

எழுத்து

யாதவப் பிரகாசர்

சரவணன் சந்திரன் · January 31, 2023

கால்பந்து மைதானத்திற்கு அருகில் இருந்த கேலரியின் படிக்கட்டுகளில் அமர்ந்து, உடலை வளைக்கும் பயிற்சிகள் செய்தபடி, தூரத்தில் ஹாக்கி மைதானத்தில் எங்களுடைய பயிற்சியாளர் அகஸ்டின், தனியாக மைதானத்தில் மட்டையால் பந்தை வலதுபுறம் தள்ளி மறுபடி இடதுபக்கம் வெட்டி இழுக்கிற பயிற்சியை மறுபடி மறுபடி செய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். சாதரணமானதுதானே என்று தோன்றலாம். அது அப்படியில்லை. வலதுபுறத்துக்குப் பந்தைத் தள்ளும்போது வலது காலும் அங்கே பறந்து, பிறகு காற்றிலேயே இடதுபுறத்துக்கு வந்து ஊன்றியவுடன் இடது காலும் சேர்ந்து திரும்புகிற பயிற்சி. பறவையொன்று […]

எழுத்து

கூன்வண்டு

சரவணன் சந்திரன் · December 27, 2022

படுக்கையில் என் மார்பு மீது கையை ஊன்றி அதில் தலையைச் சாய்த்து, மேல்நோக்கி விழிகளை உயர்த்தி, “ஹேப்பியா இருக்கீயாடா?” என்றாள் புனிதா. நானும் உடனடியாக, “ஏன்.. நல்லாத்தான் இருக்கேன்” எனப் பொய் சொல்லிவிட்டேன். அவளோடு இருக்கையில் இப்படிப் பொய் பேச வேண்டியிருக்கிறது. மனதில் இருந்ததை அப்படியே அவளிடம் கொட்டிவிட முடியாது என்பதால், என் வார்த்தைகளைத் தணிக்கை செய்தபடியே இருப்பேன். கையில் ஜெபமாலையை வைத்து மெதுவாக ஒவ்வொன்றாய் உருட்டுவதைப் போல வார்த்தைகளைப் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் தடவித் தள்ளுவேன். […]

எழுத்து

தானச் சோறு

சரவணன் சந்திரன் · October 11, 2022

ஆண்டிப் பண்டாரம் தெற்கே இருந்து நிலத்தை ஊடறுத்துக்கொண்டு மேற்கு நோக்கிச் சோர்ந்து போய் நடந்து வந்தார். மாட்டுக்கு எடுப்பதைப் போலத் தாங்கவியலாத் தாகம் எடுத்தது அவருக்கு. எதிரே இருக்கிற குன்றில், தாகம் தீர்க்கிற சொடக்குத் தக்காளிகளும் கள்ளிப் பழங்களும் கிடைக்குமென ஊகித்தார். குன்றினில் மெல்லத் தன் குச்சியை ஊன்றி மேல் நோக்கிப் பலத்தைத் திரட்டி, நடந்து போனார். பாலில் பனங்கற்கண்டைப் போட்டுக் காய்ச்சிய மணம் குன்றின் மீதிருந்து வீசியது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் போய்ச் சுருண்டது காற்று. […]

எழுத்து

அரைப் பனை

சரவணன் சந்திரன் · August 30, 2022

இடிவிழுந்து எரிந்துபோய்க் கன்னங்கரேலெனப் புல்லின் நுனியளவுகூடப் பச்சையமில்லாமல், நின்றமேனிக்கு இருந்த வேப்ப மரத்தின் பின்னால் இருந்து சுடலை நடந்து வந்தபோதுதான் முதன்முறையாக அவரைப் பார்த்தேன். சாம்பல் வண்ணத்திலிருந்து, தும்பையைத் துவைத்தெடுத்த மாதிரி வெள்ளைவேட்டி சட்டையணிந்து காட்சியாய்த் தோன்றிய அவருமே அந்தக் கரிதோய்ந்த மரத்தின் நிறத்திலேயே இருந்தார். பொன்னிமலைக் கரட்டின் உச்சியில் திரிகிற மேகப் பொதியை வெட்டி எடுத்து அவரது மூக்கிற்குக் கீழே மீசையாய் யாரோ வரைந்து விட்ட மாதிரி அத்தனை வெண்மையாய் இருந்தது. மூக்கின் துவாரங்களுக்கு உள்ளே […]

எழுத்து

மோப்பநாய்

சரவணன் சந்திரன் · July 25, 2022

மேசையில் அந்தக் கோப்பைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, விறைத்து நின்று வணக்கம் வைத்தனர் என்னுடைய இளம் அதிகாரிகள். கோப்பை எடுத்து அந்தரத்தில் தூக்கி வைத்துக் கூர்ந்து பார்த்தேன். இஸ்மாயில், வயது ஐம்பத்தி ஐந்து என மேலே எழுதியிருந்தது.  “எவ்ளோதான் போராடறது? லூசாட்டம் சொன்னதையே சொல்றாரு. அப்புறம் அமைதியாயிடறாரு. என்னோட தலையில ஆணி வச்சு யாரோ நங்கு நங்குன்னு அடிச்ச மாதிரி இருக்கு” என்றான் எனக்குக் கீழ்ப் படிநிலையில் பணிபுரியும் இளம் அதிகாரி ஒருத்தன். அவனது சட்டை முழுக்கவே வியர்வையால் […]

எழுத்து

மானு மோராஸ்

சரவணன் சந்திரன் · April 25, 2022

”இந்த ஊரிலேயே பேரழகி என ஒருத்தியைக் காட்டுகிறேன். எப்பாடுபட்டாவது அவளை எனக்கு இரையாக்கிவிடு” என ரெகார்டோவிடம் சொன்னபோது, உடனடியாக அவன் “மானு மோராஸ்” என்றான். அதுவொரு கெட்ட வார்த்தை என்பது எனக்கு உடனடியாகவே புரிந்தது. “இதுதான் எனக்கு வேலையா?” என அவன் அடுத்த வாக்கியத்தைச் சொன்ன பிறகே அவ்வார்த்தையின் மிகக் கெட்ட அர்த்தத்தை விளங்கினேன். ரெகார்டோ இப்படித்தான் எப்போது பார்த்தாலும் இந்த வார்த்தையை அடிக்கடி எச்சிலைப் போலத் துப்பிக்கொண்டே இருப்பான். இந்தியாவில் அம்மாவைக் குறிக்கும் வசைச்சொல் போல […]

எழுத்து

தேவகன்னியர் உருண்டால் புயல்!

சரவணன் சந்திரன் · February 24, 2022

கடந்த நான்கைந்து தினங்களாக வானிலை அறிவிப்புகளையும் அது சார்ந்த கணினி முன்மாதிரிகளையும் உற்று நோக்கிக்கொண்டிருந்தேன். வரும் மார்ச் (2022) ஒன்றாம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதிவரை இடையில் மூன்று நாட்கள் மட்டும் இடைவெளி விட்டு, தமிழகத்தின் பல இடங்களில் மழைக்கூறு இருப்பதாகக் கணிப்புகள் காட்டின. எனக்கு உடனடியாகச் சத்திரப்பட்டி சந்திரபோஸ் அண்ணனை அழைக்க வேண்டுமெனத் தோன்றியது. ஏனெனில் போன வருடம் காய்ந்தும் கெட்டவர், பெய்தும் கெட்டவர். முன்னோர்கள் அவருக்குக் கடத்திய, தன்னுடைய பாரம்பரிய அறிவை முன்னிறுத்தி மழைப் […]

எழுத்து

ஈ…

சரவணன் சந்திரன் · December 24, 2021

அசோகன் இரண்டு இடங்களில் தொழில் படித்தான். வேலையில்லாமல் வெட்டியாகச் சுற்றிய அசோகனுக்கு அவனுடைய அண்ணன் அர்ஜூனன்தான் படியளக்கிற பெருமாள். அவருடைய பெயரைச் சொல்லித்தான் அசோகன் காக்கா தோப்பிற்குள் ஒரு முக்கிய குறு ரௌடியாகச் சுற்றியலைந்தான். அவ்வப்போது அசோகன் சிறு வியாபாரிகளை மிரட்டிக் காசு பிடுங்கவும் தொடங்கியிருந்தான். அர்ஜூனன் மாமாவிற்கு இது தெரிந்திருந்தாலும், அவரும்கூட இன்னொரு தரப்பிடம் இதையேதான் செய்தார் என்பதால் கண்டுகொள்ளவில்லை. தாத்தாவின் அண்ணன் பையனான அர்ஜூனன் மாமா பனிரெண்டாவது படித்து முடித்ததுமே ரௌடியிசத்தில் இறங்கினார். சாதிக்காக […]

எழுத்து

லலிதாம்பிகை

சரவணன் சந்திரன் · August 29, 2021

பெசண்ட் நகர் மின் மயானத்தில் பார்த்த சிலைதான் அதுவென்பது அம்மோன நிலையிலும் எனக்குத் துலக்கமாக நினைவில் இருந்தது. பாதித் தூக்கத்திலும் இருந்தேன் அப்போது. அதற்கு முன் இந்தப் பெயரை அந்த நிறத்தில் யோசித்ததே இல்லை. கன்னங்கரிய மார்பிள் கல்லில் செதுக்கப்பட்ட பூரணமான சிலை. கையில் குழந்தையொன்றை ஏந்தியிருந்தது. கழுத்தில் மட்டரகமான பச்சை நிறத்தில் பாசி மணிமாலை தவழ்ந்தது. நெற்றியில் நாணயம் அளவிற்குச் சிவந்த பொட்டு.  கையில் இருக்கிற குழந்தையின் முகத்தில் புன்னகை தென்பட்டது. லலிதாம்பிகையின் முகத்தை நெருக்கத்தில் […]

எழுத்து

ஹோட்டல் கே

சரவணன் சந்திரன் · June 24, 2021

ஒருமணி நேரத்தில் திரும்பவும் அழைக்கிறேன் எனப் புதிய எண்ணொன்றில் இருந்து முகுந்த் நாராயணி சொன்ன போது, அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து துள்ளினேன். அப்படி எழுந்த போது, விமானம் தரையிலிருந்து எழும்புவதற்கு முன்பு சப்தமிடுவதைப் போல, ஹ்ஹஹக் என எல்லோருக்கும் கேட்கும்படியான உறுமல் கேட்டதாகப் பிற்பாடு அலுவலக நண்பன் ஒருத்தன் சொன்னான். அவனிடமிருந்து அழைப்பு என்றதுமே ஆர்வ மிகுதியில் நானே அப்படிச் சப்தமிட்டிருக்கிறேன் போல. நெஞ்சளவு கேபின் இருக்கிற என்னுடைய அலுவலகத்தில் ஏதோ துக்கச் செய்தி வந்துவிட்டது என […]