Tag: எம்.கே.மணி

எழுத்து

கைவிடப்படுகிற கூட்டத்தின் தொடர் கதைகள் (Christ Stopped at Eboli, 1979)

எம்.கே.மணி · 15.12.18

ஒரு குழந்தை கையில் கிடைத்த புதிய விளையாட்டு சாதனத்தை வைத்துக் கொண்டு கிளர்ச்சியடைந்து உண்ணாமல் உறங்காமல் அதனுடன் கட்டிப் புரளுவது போல பெரியவர்களுக்கும் பல காரியங்கள் உண்டு. வளர்ந்தவர்கள் அப்படித்தான் தங்களுடைய கையில் கிட்டிய அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் யுத்தங்களைத் தொடங்கினார்கள். விளைவுகள் பயங்கரமாக இருந்தன. அதை பொதுமைப்படுத்தி ஒதுக்கி தங்களுடைய அசட்டுப் பிடிவாதத்தை நியாயம் பண்ணிக் கொள்ள அரசியல் தேவைப்பட்டது. அதை சுவாரசியமான சூதாட்டமாக மாற்றியவுடன் மக்கள் துண்டுபட்டு மங்காத்தா ஆட உட்கார்ந்து விட்டார்கள். அது இப்போது […]

எழுத்து

ஸொல்தான் ஃபாப்ரி : ஹங்கேரியிலிருந்து பேசுகிற கலைஞன்

எம்.கே.மணி · 14.11.18

“…you must make them hate themselves!“ உக்கிரமான சூழல் அது. பேராசையும் இனவெறியும் செலுத்தின இரண்டாம் உலகப் போரின் கொந்தளிப்பான தருணத்தில் மனிதன் குழி எலியைப் போல பதுங்க வேண்டியிருந்தது. பித்து நிலையை ஒரு நோய் போல பரவச் செய்த அதிகாரம் சாமான்ய மனிதர்களை கையாண்ட முறைமைகள் கற்காலத்தில் இருந்தும் கேள்விப்பட்டிருக்க முடியாதவை. தி ஃபிப்த் சீல் (The Fifth Seal) படத்தில் மனிதனின் அதிகாரம் எந்த எல்லைக்கும் போக முடியுமென்பதை உணர்த்தும் ஒரு வசனம் […]