Tag: மானசீகன்

எழுத்து

நாமும் அஜ்னபி தான் – மானசீகன்

மானசீகன் · August 17, 2019

அது ஓர் அரையாண்டு சமூக அறிவியல் தேர்வு என்று நினைக்கிறேன். ஒரு தமிழாசிரியர் தேர்வுக் கண்காணிப்பாளராக வந்திருந்தார். தேர்வறைகளில் எதையாவது உளறுவதே அவர் வழக்கம். சுற்றிச் சுற்றி வந்தவர் என் மேப்பைப் பிடுங்கிப் பார்த்தார். ‘ஏண்டா பாய்! இப்டி தப்பா எழுதி இருக்க?  சவூதி அரேபியா  இங்கயா இருக்கு? தப்பா போட்ருக்க’ என்று சொல்லிக் கொண்டே மேப்போடு  வகுப்பறையின் மத்திக்குச் சென்று விட்டார். எல்லோரிடமும் அதைக் காட்டிக் கொண்டே ‘பார்த்தியாடா, பாய் தப்பா எழுதிருக்கிறதை? இந்தியாவ தப்பா […]

எழுத்து

தோப்பில் எனும் நவீனத்துவர்

மானசீகன் · May 22, 2019

இஸ்லாம் தமிழ் மண்ணில் வேரூன்றிய காலத்திலிருந்து இஸ்லாமியர்களும் இங்கே இலக்கியங்களைப் படைத்துக் கொண்டு தான் இருந்தனர். சீறாப்புராணம், குத்பு நாயகம், ராஜநாயகம் போன்ற காப்பியங்களும் மஸ்தான் சாகிபு, பீரப்பா ஆகியோர் எழுதிய ஞானப் பாடல்களும் தமிழ் மரபின் சுவையோடு படைக்கப்பட்டன. அருணகிரிநாதர் எழுதிய அதே ஓசையோடு காசிம் புலவர் ‘திருப்புகழ்’ படைத்தார். சிற்றிலக்கியங்களில் ‘உலா’ தவிர்த்த அனைத்து வடிவங்களிலும் இஸ்லாமியப் புலவர்கள் படைப்புகளைப் படைத்தனர். முனஜாத்து, நாமா, கிஸ்ஸா, படைப்போர் போன்ற சிற்றிலக்கிய வடிவங்களை அவர்கள் புதிதாக […]

எழுத்து

பீரப்பாவின் பாடல்களில் பெண்மை குறியீட்டாக்கம்

மானசீகன் · April 20, 2019

சூஃபியிசம்: இந்தியாவில் இஸ்லாம் மூன்று விதமாகப் பரவியது. ஒரு பக்கம் மன்னர்களும் படைத்தளபதிளும் இங்கிருந்த மன்னர்களோடு போர்த் தொடுத்து தங்கள்  ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர். அதற்கும் முன்பாகவே அரபு வணிகர்கள் கடல் வழியாக வணிகம் செய்து வணிகத் தொடர்புகளோடு திருமணத் தொடர்புகளையும் ஏற்படுத்தி இங்கு குடியேறினர். ஏறத்தாழ இதே தருணத்தில் வெளியிலிருந்து வந்த சூஃபி ஞானிகளும் இங்கிருந்து உருவாகியவர்களும் இந்திய  ஆன்மீகத்தின் பல்வேறு கூறுகளை உள்வாங்கிக் கொண்டு தங்கள் பணிகளாலும், வர்ணாசிரமம் கடந்த மானுட சமத்துவத்தாலும் இங்கிருப்போரின் […]

எழுத்து

தலையங்கம் : நாடாளுமன்றத் தேர்தல்

மானசீகன் · March 18, 2019

இந்த நாடாளுமன்றத் தேர்தல் பல காரணங்களால் மிக முக்கியமான ஒன்று. கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத முதல் தேர்தல் இது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்தே தமிழகத்தில் இருக்கிற பல கட்சிகளின் நிஜமான பலத்தைக் கண்டறிய முடியும். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மாபெரும் அராஜகங்களை, ஜனநாயகப் படுகொலைகளை, மதச்சார்பின்மைக்கு எதிரான அறைகூவல்களை, தலித்துகள் மீதான தாக்குதல்களை, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான மீறல்களை, தேசத்தையே திகைக்க வைத்த பொருளாதாரத் […]

எழுத்து

அறம் சொல்ல விரும்பு: அரசு ஊழியர்கள் போராட்டம்

மானசீகன் · February 17, 2019

“அரசு ஊழியர் போராட்டங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?” என்று ஒரு நண்பர் கேட்டார். என்னால் உடனடியாகப் பதில் கூற இயலவில்லை. ‘போராடுவதற்கான உரிமைகளை மதிக்கிறேன். அவர்களது தரப்பின் நியாயங்களை உணர்கிறேன் . ஆனால் அது அவர்களுக்கும், அரசுக்கும் இடையிலான முரண். எந்தப் போராட்டத்திற்கும் பேச்சு வார்த்தையே தீர்வு என்பதே என் நிலைப்பாடு. அது நிகழாமல் போனதற்காக வருந்துகிறேன். ஆனால் இந்தப் போராட்டத்திலிருந்து அரசு ஊழியர்கள் பெற வேண்டிய படிப்பினைகள் நிறைய இருக்கின்றன என்றே நான் நம்புகிறேன்’ என்று […]

எழுத்து

பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 4)

மானசீகன் · January 13, 2019

‘ஸ்காலர்ஷிப்னா என்னடா? எதுக்கு தர்றாங்க?’ ‘அது அய்யருகள்லாம் சூத்திரன்னு ஒதுக்கி வச்சுட்டாங்கள்ல? அதுக்காக கவர்மெண்ட் நமக்கு காசு கொடுக்குது.’ ‘அதில்ல மாப்ள. அம்பேத்கர் அவுக ஆளுகள்ல படிக்கிறவனுகளுக்கு துட்டு தரணும்னு அரசியல் சட்டத்தில எழுதி வச்சுட்டாராம். தேவர் சண்டை போட்ருக்காப்ல. அதுக்கப்புறம்தான் நமக்கும் காசு வருது.’ ‘அப்ப தேவர்தான் ஸ்காலர்ஷிப் வாங்கிக் கொடுத்தாரா? எங்க தாத்தா வெள்ளக்காரன் சட்டம் போட்டதுன்னு சொன்னாரு.’ ‘யார் தந்ததுன்னு தெரியல. ஆனா பெரியார், அம்பேத்கர் எல்லாம் போராடிருக்காங்க.’ ‘எம்ஜிஆராத்தான் மாப்ள இருக்கும். […]

எழுத்து

பின் தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 3)

மானசீகன் · December 15, 2018

சாதிக் கலவரங்களை எம்ஜிஆர் × நம்பியார் கத்திச் சண்டையைப் போல் புரிந்து வைத்திருந்த எனக்கு அதன் கொடூரத்தை பத்து வயதிற்குள்ளாகவே உணர்கிற வாய்ப்பு வந்தது. 1989 ஆம் வருடம் நாங்கள் சின்னமனூர் கருங்கட்டான்குளத்தில் இருந்தோம். மறவர்கள் அதிகமாகவும், இஸ்லாமியர்கள் குறைவாகவும் வாழும் பகுதி அது. கொஞ்சம் கூட வேறுபாடில்லாத நெருக்கமான உறவு மறவர்களோடு எங்களைப் போலவே அங்கிருந்த பல இஸ்லாமியக் குடும்பங்களுக்கும் வாய்த்திருந்தது. சின்னமனூர் – தேனி நெடுஞ்சாலையில் முதல் நிறுத்தம் காந்தி சிலைதான். அங்குதான் ஐந்து […]

எழுத்து

பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 2)

மானசீகன் · November 14, 2018

தாத்தா இறந்த பிறகும் அவர் நினைவாக ஒரு பெட்டி இருக்கிறது. அந்தப் பெட்டிக்குள் தான் விஜயராணி அக்காளின் படம் இருக்கிறது. விஜயராணி அக்காளை நான் நேரடியாகப் பார்த்ததில்லை. புகைப்படத்தில் இருக்கிற அந்த பிம்பத்திற்கு பதினாறு வயசிருக்கும். கருப்பு வெள்ளைப் புகைப்படம். சற்றே தலையைச் சாய்த்தது போலவே அக்கா நின்றிருப்பார். ஃபோட்டோவில் சுமார் தான். ஒருவேளை நேரில் பார்க்க அழகாய் இருக்கலாம். அது ஏதோ ஒரு ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படமாகவே இருக்கக் கூடும். கொஞ்சம் அழுக்கேறியிருந்தது. நன்னிமா அதை […]

எழுத்து

பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 1)

மானசீகன் · October 12, 2018

சாதி என்ற சொல்லின் பொருளை எப்போது உணர்ந்தேன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மேடைகளில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா. குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாரதியாரை பொருள் புரியாமல் மேடைகளில் ஒப்பிக்க ஆரம்பித்தத் தருணத்தில் கண்டிப்பாய் அதை உணர்ந்திருக்கவில்லை. சாதிக்கு எதிராய் பேசினால் கை தட்டு கிடைக்கும். கீழே நாம் உட்கார்ந்திருந்தால் அதற்கு கண்டிப்பாக கை தட்ட வேண்டும். இவ்வளவுதான் என் புரிதல். நான்காம் வகுப்பு வரை குச்சனூரில் படித்தேன். அப்போது ஒரு நண்பனின் […]

எழுத்து

சகலமுமாகி விட்ட பூதம்

மானசீகன் · September 13, 2018

மனித இருப்பே இரண்டே இரண்டு சொற்களால் கட்டமைக்கப்பட்டதுதான். ஒன்று அன்பு ; மற்றொன்று அதிகாரம். நாம் அன்பை பிறரிடம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டே அதிகாரத்தை இன்னொருவருக்குப் பரிசாகத் தருகிறோம். இந்த முரண்தான் நம் வாழ்வின் மிகப்பெரிய சிக்கல். உண்மையில் மனிதகுலம் கண்டடைந்திருக்கிற நாகரிகம் என்பதே அதிகாரத்தின் கை மாறல்தான். எல்லா மதத் தொன்மங்களிலும் இதற்கான தடத்தைப் பார்க்க முடியும். பழமோ , பாம்போ அங்கே ஒரு பிரச்சினை அல்ல. அதிகாரத்திற்குக் கட்டுப்படாமைதான் ஏதேன் தோட்டத்தில் இருந்து மனிதனை […]

எழுத்து

அந்தச் செம்பு ரொம்பப் பழசு

மானசீகன் · August 13, 2018

தமிழ் சினிமாவிற்கும் தமிழர்களின் வாழ்க்கைக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பதில்லை. தமிழ்ச் சமூகத்தின் உணர்ச்சிகரமான பல்வேறு மாறுதல்களை தமிழ்த் திரைப்படங்கள் பதிவு செய்யவும் இல்லை. விதவையான பின் சர்வ சாதாரணமாக அறுத்துக் கட்டும் பழக்கமுடைய பல சாதிகள் இங்குண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் பிராமணரல்லாத பல பெண்களும் இரண்டாயிரம் வரையிலும் கூட வெள்ளைச் சேலைகளோடு தான் பவனி வந்தார்கள். திராவிட இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று வந்த காலத்தில் அதன் அடையாளமாகக் கருதப்பட்ட எம்ஜிஆர் சம்பந்தமே இல்லாத […]

எழுத்து

முன்னம் அவனது நாமம் கேட்டேன்

மானசீகன் · July 9, 2018

அந்தக் கதை இப்படித்தான் துவங்கும். ‘கேத்தரின் ‘என்கிற பெயர் ஒரு தேவதைக் கதை வழியாக  ஒரு சிறுவனுக்கு அறிமுகமாகும். அன்றிலிருந்து அந்தப் பெயரை காதலிக்கத் தொடங்கி விடுவான். ஒவ்வொரு நாளும் விதவிதமாக அந்தப் பெயரைச் சொல்லிப் பார்ப்பான். அதைச் சொல்லிப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு நறுமணம் தன்னைச் சூழ்ந்து கொள்வதாக அவனுக்கு ஒரு பிரமை தட்டும்.அந்தப் பெயரால் விரியும் முடிவற்ற சாத்தியங்களின் வழியேஅவன் தன் பிரக்ஞையை நழுவ விட்டிருப்பான். கல்லூரி படிக்கும் போது ஒரு பெண்ணை […]