தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமியின் கதைகளில் தொன்மம்
எந்தக் கலைப் படைப்பும் அந்தரத்திலிருந்து கிளம்பி வருவதில்லை. ஏற்கனவே நிலைகொண்டிருக்கும் மரபுகளும் தொன்மங்களும் ஒரு படைப்பாளனின் நனவிலி மனதை ஆட்கொள்ளாமல் இருக்க முடியாது. மகத்தான படைப்பாளர்களின் படைப்புகளில் அவர்கள் வாழும் மண், பேசும் மொழி சார்ந்த தொன்மங்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். தமிழில் புனைவெழுத்தின் முன்னோடியாகக் கருதப்படும் புதுமைப்பித்தன் பல தொன்மக் கதைகளையும் எழுதியிருக்கிறார். அவருடைய ‘ சாப விமோசனம்’, ‘அகல்யா’ போன்ற கதைகள் இராமாயணத் தொன்மத்தையும், ‘அன்றிரவு’ மாணிக்கவாசகர் வரலாறையும், ‘சிற்பியின் நரகம்’, ‘கபாடபுரம்’ ஆகியவை தமிழ் வரலாறு […]
