எழுத்து
எம்.வி.வெங்கட்ராமின் நெகிடித் தீ
ராஜமய்யர், அ.மாதவையா, புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, க.நா.சுப்ரமண்யம், தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், கிருத்திகா, பிரமிள், ஜெயமோகன், சு.வேணுகோபால் என்ற வகையில் ஒரு புனைகதை எழுத்தாளர் குழு முன்னணியில் வைக்கப்படுவதுண்டு. இவர்களது பெரும்பாலான படைப்புகளை உயர்நிலையில் வைத்து மதிப்பிடுவார்கள். நகுலன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன், சம்பத், தஞ்சை பிரகாஷ், சாரு நிவேதிதா என்ற வரிசையையும் உண்டாக்கலாம். இவர்கள் மீறலும் ஒதுக்குதலும் மிகைப்படுத்தலும் பெற்றவர்கள். சங்கரராம், ந.பிச்சமூர்த்தி, ந.சிதம்பரசுப்ரமணியன், ஆர்.ஷண்முகசுந்தரம், ரகுநாதன், ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், […]