Tag: இதழ் 26

சிறுகதை

தங்க நொடிகள்

கலைச்செல்வி · December 22, 2020

வசிட்டா ஏரியில் நீர்பெருகி ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரைக்கும் படுகைக்கும் இடையே உயர்ந்திருந்த ஈரமான நிலங்கள் கிராமங்கள் என்றாகின. அவை வரிசையாக அமைந்திருந்தாலும் கோடு கிழித்தாற் போன்றிருப்பதில்லை. ஏரிக்குள் வளைந்தும் படுகைக்குள் நுழைந்துமாக அமைந்த கிராமங்களில் நகருடன் இணையும் பிரதான சாலையின் அருகாமையில் இருந்தது சர்வாடா கிராமம். நீரின் செழிப்பும் நிலத்தின் வளமும் கிராமங்களை வயல்களுக்குள் புதைத்திருந்தன. போக்குப்பாதைகளைத் தவிர்த்து சிறு மண்பரப்புகளைக்கூட தாவரங்கள் தவறவிடவில்லை. காணுமிடமெங்கும் பசுமை சூழ்ந்திருந்தது. படுகைகள் நீண்டு காடுகளாகியிருந்தன. வங்கத்தின் மாரிக்கால மாதமொன்றில் […]

கட்டுரை

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்: கு.அழகிரிசாமி படைப்புகளில் காமம் (பகுதி 2)

மானசீகன் · December 22, 2020

காமம் குறித்து நுட்பமாக எழுதியவராக கு.அழகிரிசாமியைக் குறித்து பல விமர்சகர்களுக்குத் தோன்றாமலிருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றுண்டு. அவர், தான் முனைந்து உருவாக்கிய டார்ச் கொண்டு எந்தக் கதாபாத்திரத்தின் மீதும் அடித்து, அவர்களின் காமத்தைப் பகிரங்கமாகச் சொல்ல வைத்தவர் அல்ல. சொல்லப்போனால், அவரே அது குறித்து விரிவாகப் பேசுவதில்லை. சம்பவங்களுக்கும் உரையாடல்களுக்கும் இடையிலான நுண்இடைவெளியில் நாமே கண்டறிய வேண்டிய மறைபொருளாகவே காமம் குறித்த அவரது பார்வை ஒளிந்திருக்கிறது. இதையும்கூட கண்ணி வெடியாக நினைத்து சம்பவங்களுக்குள் அவர் புதைத்து […]

தமிழ்

‘Rotten crazy bastards’: டிசிகாவின் ‘Two Women’

எம்.கே.மணி · December 22, 2020

டிசிகாவின் படங்களைப் பார்ப்பதென்பது உலகை விரிவான பார்வையில் பார்க்கிற ஒரு நல்ல மனிதருடன் உட்கார்ந்து பேசுவது போல.  இயக்குநரைப் பற்றின அறிமுகம் எதுவுமில்லாமல் நான் முதன்முறையாக படம் பார்த்துத் திகைக்கும்போது, பை சைக்கிள் தீவ்சில் போர்வையை அடகுவைக்கிற காட்சியை ஒருபோதும் மறக்க முடியாதபடிக்கு தனியாக எடுத்துக்கொண்டு வந்தேன். அந்தப் போர்வையை கடையிலிருக்கும் ஆள் ஒரு அடுக்கில் வைக்கப்போகும் போது, பிரம்மாண்டமான அக்கடையின் எல்லா அடுக்குகளிலும் போர்வைகளாக குவிந்திருக்கும். இது தன்னுடைய கதாபாத்திரமான ஒரு தனி ஆளுக்குச் சூழ்ந்த துயர் […]

தமிழ்

தீர்த்த யாத்திரை

எம்.கோபாலகிருஷ்ணன் · December 22, 2020

வியாழக்கிழமை கண்விழித்தபோதே பயம் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. சுப்ரபாதம் சன்னமாக ஒலித்திருந்தது. அம்மா வழக்கம்போல விடிகாலையிலேயே தலைகுளித்து, கோலமிட்டு, பூஜையில் உட்கார்ந்திருந்தாள். கையில் விளக்குடன் நின்ற சின்னக்காவைக் கண்டதும் படபடப்பு கூடியது. சங்கரி கிளம்பியிருப்பாளா?    ஒரு மாதமாய்ப் பேசி, விவாதித்து, சண்டைபோட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவான திட்டம். காலையில் பத்து மணிக்கெல்லாம் சிவன்மலை அடிவாரத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. அங்கிருந்து மலையேறி கோயிலுக்குப் போவது, மாலை மாற்றி தாலி கட்டிக்கொள்வது என்றும் முடிவு. அதன்பிறகு கரூர் வரைக்கும் பேருந்துப் […]

சிறுகதை

சூழ்வின் இருள்

இளங்கோவன் முத்தையா · December 22, 2020

காலையில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலிருந்தாள் அமுதவல்லி. கண்ணாடி பார்த்து ஸ்டிக்கர் பொட்டை ஒட்டும்போதுதான் அதைக் கவனித்தாள். ஒரு சந்தேகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஜன்னலின் அருகே நின்று வெளிச்சத்தில் வைத்துப்பார்த்த போது உறுதியாகத் தெரிந்தது… அது நரை முடிதான். முன்னெற்றியின் புருவத்திற்கு அருகே அந்த ஒற்றை நரைமுடி அழகாகச் சுருண்டுவிழாமல் இருந்திருந்தால், தனக்கு நரைக்க ஆரம்பித்திருப்பதே அவளுக்குத் தெரிந்திருக்காது. வேறு எங்கும் நரைத்திருக்கிறதா என்று விரல்களால் முன் தலையில் இருந்த முடிக்கற்றைகளை இலேசாக ஒதுக்கிப் பார்த்தாள். […]

கட்டுரை

கதைநிலத்தின் விதைநெல்: இராசேந்திர சோழன் சிறுகதைகள்

குணா கந்தசாமி · December 22, 2020

இராசேந்திர சோழனுடைய எழுபத்து ஏழு சிறுகதைகள் தமிழினி பதிப்பகத்தால் ஏறத்தாழ ஆயிரம் பக்கத் தொகைநூலாகத் தொகுக்கப்பட்டு டிசம்பர் 2014-இல் வெளியாகியிருக்கிறது. அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரிலும் அவர் எழுதியிருக்கிறார் என்ற தகவல் இலக்கிய வாசகர்கள் ஏற்கெனவே அறிந்ததுதான். தன்னுடைய இலக்கிய – அரசியல் செயற்பாட்டின் நெடிய அனுபவத் திரட்சியோடு இந்தத் தொகைநூலுக்கு அவர் எழுதியிருக்கும் பின்னுரை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தொகுப்பை வாசித்து முடித்தபின் அவருடைய கதைகளைக் குறித்து எனக்குள் திரண்ட கருத்துகளும் தன் கதைகளைக் குறித்து அவரே சொல்லும் […]

தமிழ்

கலை வேட்கையின் நெருக்கடிகளும் தொலையும் யதார்த்தமும் 

அத்தியா · December 22, 2020

கடந்த வருட சென்னைத் திரைப்பட விழாவில் மிகவும் ஈர்த்த திரைப்படங்களுள் Sibyl (2019) பிரதானமானது. குறிப்பாக, படைப்பாளியாகவிருப்பவர்கள் பாலின வேறுபாடின்றி தன் படைப்பை வழங்குவதற்காக, இயன்றவரை மேற்கொள்ளும் முயற்சிகளும் படைப்பு நெருக்கடிகளும் சுரண்டல்களும் விமர்சிக்கப்படுகின்ற அதேவேளையில், தனிப்பட்ட வாழ்க்கையில் குணப்படுத்த முடியாத காயங்கள், ஒரு படைப்பை உருவாக்குவதன் மூலம் அதைக் கடக்க முயலுதல், தன் அடையாளத்தை நோக்கிய தேடலின்பால் முன்னகர்தல் என்றவாறு திரைப்படத்தின் பார்வைகள் விரிந்துசெல்கின்றன. திரைப்படம் பெண்மையப் புனைவின் வழி நகர்ந்து, முழுக்க முழுக்க படைப்புசார் சுயவிமர்சனப் […]

சிறுகதை

ஓசைகள்

கே.ஜே.அசோக்குமார் · December 22, 2020

அதிகாலையில் ஒலிக்கப்படும் இசையில் குளிர் இருக்கிறது. மென்குளிரில் நீர்நிலையில் மேல் ஏற்படும் சிறு அதிர்வை ஒத்திருக்கிறது. காதுகளுக்குள் நுழையும்போது இதமான குளிருடன் நுழைகிறது. அந்தக் குளிர், பனிபடர்ந்த உயரத்திலும் அந்தரத்திலும் உடலைத் தூக்கிச் செல்கிறது. இனிய மதுவை முகர்ந்து பார்க்கும் சிலிர்ப்பு, சிறுதுளியாக உதடுகளில் விழுந்து வயிறை அடையும் பிரம்மாண்ட தருணம் இசையின் தொடக்கம். மேலேறும் வயலினின் ஓட்டத்தை இடைநுழைந்து அலகுகளாகப் பிரிக்கும் பியானோவின் இசை, இவற்றை குதிரை ஓட்டத்தோடு பின்தொடர்கிறது தபலா.  எங்கே நிற்கிறேன்? என்னை […]

English

Best Documentaries of All Time

கோகுல் பிரசாத் · December 22, 2020

This is the third and final installment in the series of lists that I have been compiling. Previously, best directors of all time and the greatest films of all time were ranked. Shoah (1985) – Claude Lanzmann Dead Souls (2018) – Wang Bing (Mubi) The Look of Silence (2014) – Joshua Oppenheimer Shoah Sisters (2018) […]

English

How to be an Ecosattva?

David Loy · December 22, 2020

David R. Loy is an authorized teacher in the Sanbo Kyodan lineage of Zen Buddhism. How do bodhisattvas respond to the greatest crisis of our time? Appropriately, says Buddhist teacher and activist David Loy. One of my favorite Zen stories is short and simple. A student asks the master, “What is the constant activity of […]