தமிழ்
அகம் சுட்டும் முகம் (பகுதி 9): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்
முழு துஷ்டனாக உருமாறிவிட்ட பேபிச்சாயன் என்கிற பேபியை அவனது உறவினரும், அந்த ஊரின் சர்ச் பாதருமான கோபி, அவனை முழுமையாக வளைத்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில் இறுதிக் கேள்வியாக ஒன்றைக் கேட்கிறார். “நீ உன் குடும்பத்தின் மீது அன்பாக இருக்கிறாய் அல்லவா?“ பேபி இல்லை என்கிறான். அவர் துணுக்குறுகிறார். மேலே பேசுவதற்கு வழியே இல்லை. பதற்றத்துடன் “ஏன் அப்படி?“ என்கிறார். “என்னிடம் யாரும் அன்பாயில்லை. நானும் இல்லை” என்கிறான் அவன். எப்படிப் பார்த்தாலும் இதுதான் கதையின் மையப்புள்ளி. […]