Tag: இல. சுபத்ரா

எழுத்து

மலையைக் கடந்து வந்த கரடி – ஆலிஸ் மன்ரோ

இல. சுபத்ரா · 30.01.22

ஃபியோனா தன் பெற்றோரின் இல்லத்தில் வசித்துவந்தாள். அவளும் க்ராண்ட்டும் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுவந்த நகரத்தில் அது இருந்தது. மிகப்பெரிய அவ்வீடு, கூண்டுவடிவ வெளித்தள்ளிய ஜன்னலைக்கொண்டிருந்தது. விரிப்புகள் தரையில் கலைந்து கிடக்க, காபிக் கோப்பைகளின் அடிவளையங்கள் மேஜையின் மேற்பூச்சில் தழும்புகளாய்ப் படிந்திருக்கும் அவ்வீட்டினை ஒழுங்கற்றதும் சொகுசானதும் எனக் க்ராண்ட் எப்போதும் கருதியிருக்கிறான். ஐஸ்லாந்திய குணாதிசயங்கள் கொண்ட அவளது அம்மா, ததும்பும் வெண்கூந்தலையும் தீவிர இடதுசாரி அரசியலையும் வரித்தவர். நகரின் முக்கியமான இதய சிகிச்சை மருத்துவரான அவளது அப்பாவிற்கு, மருத்துவமனையில் நல்ல […]

எழுத்து

கற்பித்தல் முறையில் மாற்றங்கள் சாத்தியமா? – மார்க் ப்ரென்ஸ்கியின் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பார்வை

இல. சுபத்ரா · 16.05.20

கிருஷ்ணா கல்லூரி மாணவர்களுடன் ஆளுமைத்திறன் சார்ந்து உரையாற்றிய பின் கேள்வி நேரத்தில், “தற்கால மாணவர்களாகிய எங்களுக்கு பொறுப்பு இல்லையென்பது பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது. அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு மாணவர் கேட்டார். ”இந்தக்கால மாணவர்களாகிய உங்களது பெரும்பான்மையான நேரம் செல்பேசியிலும் இணையத்திலும் செலவழிக்கப்படுவதால் நீங்கள் எல்லாவற்றையும் மிக எளிதானதெனக் கருதிக் கொள்கிறீர்கள். எங்களது காலத்தில் அறிவு சார்ந்த ஒரே போக்கிடமாக ஆசிரியர்கள் இருந்தார்கள். ஆனால் உங்களுக்கு ஒரே நொடியில் எது குறித்த தகவல்களையும் […]