கவிதை
அங்கே சொற்களுக்கு அவசியமில்லை
வெற்றிடம் – அம்ருதா ப்ரீதம் (Amrita Pritam) இரண்டு இராஜ்ஜியங்கள் மட்டுமே அங்கேயிருந்தன. முதலாவது அவனையும் என்னையும் வெளியேற்றியது. இரண்டாவதை நாங்கள் புறக்கணித்தோம். வெறுமையான வானத்தின் கீழ் நான் நெடுங்காலமாக என் மேனியின் பொழிவில் மூழ்கிப்போயிருந்தேன். அவனோ தனது ஈரத்தில் அழுகிக்கொண்டிருந்தான். பிறகு வருடக்கணக்கான நேசத்தை விஷத்தைப் போலப் பருகியவன், தனது நடுங்கும் கைகளால் எனது கரத்தைப் பற்றியவாறு சொன்னான் “அதோ,நமக்கு முன்பாக, உண்மைக்கும் பொய்க்குமிடையே சிறியதொரு வெற்றிடம் இருக்கிறதே அங்கே, நம் தலைகளுக்கு மேலாக ஒரு […]