தமிழ்
காஃப்காவின் நண்பர் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்
காஃப்கா எழுதிய நூல்களை வாசிப்பதற்குப் பல வருடங்களுக்கு முன்பே காஃப்காவின் நண்பரும், யூத நாடகக் குழு ஒன்றின் முன்னாள் நடிகருமான ஜாக் கோஹன் மூலமாக அவரை நான் அறிந்திருந்தேன். முன்னாள் நடிகர் என்று நான் ஜாக்கைக் குறிப்பிடக் காரணம் எனக்கு அறிமுகமான போதே அவர் மேடை நாடகங்களில் நடிப்பது நின்றுவிட்டிருந்தது. வார்சாவின் யூத நாடக அரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை முப்பதுகளின் துவக்கத்திலேயே குறைய ஆரம்பித்திருந்தது. ஜாக்கும்கூட நொடித்துப் போயிருந்தார். தன் பகட்டைப் பறைசாற்றும்படியான நாகரீக உடைகளையே அவர் இப்போது […]