Tag: சோஃபியா சேமட்டார்

தமிழ்

பராமரிப்பாளர் – சோஃபியா சேமட்டார்

இல. சுபத்ரா · December 24, 2021

நான் ஒரு பராமரிப்பாளர். செயிண்ட்.பெனடிக்ட் கதிரியக்கப் பொருட்கள் கட்டுப்பாட்டு மையத்தைப் பராமரிக்கிறேன். கடினப்படுத்தப்பட்ட கண்ணாடி வழியாகவே நான் வெளியுலகத்தைக் காண்கிறேன். எனது சுற்றுப்புறம் உயிர்ப்பற்றது என்றாலும் வசதியானது. எனக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் – தேவையோ சொகுசோ – கூட்டாட்சி நிலைத்தன்மை திட்டத்திடம் கேட்டு நான் பெற்றுக்கொள்ளலாம். நான் கோரிய பொருட்கள் ஒரு சரக்கு வண்டியின் வாயிலாகக் கொணரப்பட்டு நச்சுநீக்கம் செய்கிற பெட்டிக்குள் வைக்கப்படும். காற்றிலிருக்கிற நச்சினைக்கூட அதனால் நீக்க முடியும். வெளியுலகின் நச்சுத்தன்மையிலிருந்து என்னைக் காப்பதல்ல […]