தமிழ்
முறிவு – ஜான் அப்டைக்
இனிய நாள். அற்புதமான நாள். மேப்பில் தம்பதியரின் அகத்துயரை, வெய்யோன் ஒளியின் பொன் தம்பங்களாலும் இயற்கைப் பெருக்கின் கெட்டிப்பசுமையாலும் ஆன ஜூன் மாதப் பருவநிலை பரிகாசம் செய்தது. அவர்களது உரையாடல் இந்த இயற்கையின் அற்புதத்தை ரசிக்கும் ஆவலைக் குன்றச்செய்து, தங்களது துயரையே எண்ணி நோகும் தற்புலம்பல்கள் மட்டுமே ஆகி இருந்தது. அது மட்டுமே அங்கு நிலவிய இயற்கைப் பேரழகின் மீதான ஒற்றைக் கறை என்று அப்போது தோன்றியது. வழக்கமாக இந்தப் பருவத்தில் அவர்கள் தோலில் கரும்புள்ளிகள் தோன்றியிருக்கும். […]