கட்டுரை
தொ.ப எனும் பெருசு
தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் சிறு வட்டத்துக்குள் சுடரும் தீக்குச்சி நெருப்பைப் போன்றவர்கள். அவர்கள் தாரகைகளாக உருமாற வேண்டும் என்றால் சினிமாவுக்குப் போய் பாட்டெழுதி கதாநாயகிகளை வார்த்தைகளால் துகிலுரிய வேண்டும். குறைந்தபட்சம் அரசியல்வாதிகள் தலைமையேற்கும் நிகழ்ச்சிகளில் போய் உட்கார்ந்துகொண்டு ‘நீ உன் மானத்தால் வானத்தை நாண வைத்தவன்’ என்று சிரிக்காமல் கயிறு திரிப்பதற்குக் கற்றிருக்க வேண்டும். மற்றவர்களையெல்லாம் ‘எழுத்தாளர்கள்’ என்று அவர்கள் குடும்பத்திற்கே தெரியாது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. முகநூல் வந்த பிறகு சுயமி படத்தை பதிவேற்றம் செய்து விருப்பக்குறிகளை […]