Tag: த. கண்ணன்

எழுத்து

அறம்பிறழ்ந்தோரிற் கடையோன்

த. கண்ணன் · 29.08.21

Operation Finale என்றொரு படம் நெட்பிளிக்சில் உள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் பார்த்தேன். சுமாரான நாஜி வேட்டைப் படம்தான். யூதர்களை அழித்தொழிக்கும் இறுதித் தீர்வை வடிவமைப்பதில் முதன்மையானதொரு பங்காற்றிய அடால்ஃப் ஐக்மேன் (Adolf Eichmann) அர்ஜெண்டினாவில் குடும்பத்தோடு மறைந்து வாழ்ந்துகொண்டிருந்தார். மொசாடைச் சேர்ந்த யூத உளவாளிகள் அவரைக் கைப்பற்றி இசுரேலுக்குக் கடத்தி வருவதுதான் படம். மூன்று காரணங்களுக்காக அப்படம் மனதில் நின்றது. முதல் காரணம், ஐக்மேன் அவ்வளவு பெரிய அழித்தொழிப்பு குறித்த குற்றவுணர்வு அற்றவராகவே பெரும்பாலும் வருவார். தன்னைச் […]

English

The Slumbering Fire of Wild Fanaticism: Shakespeare and Scott on Jews – Kannan. T

த. கண்ணன் · 24.08.20

One of the fallouts of having a home-schooled daughter is that you get to do certain things you wouldn’t otherwise do. I have been revisiting some of the English classics along with her and relishing the experience. A recent addition was Walter Scott’s Ivanhoe. I now realize that Scott does not hold a very high […]

எழுத்து

போரும் அகிம்சையும்: காஷ்மீர் குறித்து காந்தி

த. கண்ணன் · 26.10.19

இந்தியா விடுதலை பெற்றது முதலே ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல போர்களையும் பயங்கரவாதத்தையும் மக்கள் போராட்டங்களையும் கண்டுள்ளது. இன்று இந்நிலம் மீண்டும் ஒரு மிகப்பெரிய அரசியல் சவாலைச் சந்தித்துள்ளது. சிறப்பு அந்தஸ்து தரப்பட்டிருந்த ஒரு மாநிலம், சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மாநில உரிமை நீக்கப்பட்டு, ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளது. காஷ்மீரின் அரசியல் தலைவர்களும் சில ஆயிரம் மக்களும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே உலகின் மிக அதிகமான ராணுவ இருப்பைக் கொண்ட பகுதிகளில் […]

Uncategorized

என் மக்களுக்காக – மார்கரெட் வாக்கர்

த. கண்ணன் · 15.12.18

ஒப்பாரிகள் குறும்பாடல்கள் நாட்டுப்பாடல்கள் (ப்ளூஸ்) வாழ்த்துப்பாக்கள் என்று எங்கும் தமது அடிமை கீதங்களை மீண்டும்மீண்டும் பாடிக்கொண்டும், அறிந்திராக் கடவுளிடம் இரவுதோறும் தம் துதிகளால் துதித்துக்கொண்டும், காண்பரிய சக்திக்குத் தம் கால்மடித்துப் பணிந்துகொண்டும் இருக்கும் என் மக்களுக்காக வருடங்களுக்கு – கடந்த வருடங்களுக்கும், நிகழ் வருடங்களுக்கும், வரக்கூடும் வருடங்களுக்கும் தம் வலுவை வழங்கிக்கொண்டும் துவைத்தும் தேய்த்தும் சமைத்தும் துடைத்தும் தைத்தும் திருத்தியும் களைந்தும் உழுதும் தோண்டியும் நட்டும் செதுக்கியும் சீரமைத்தும் இழுபட்டுக்கொண்டு என்றும் ஈட்டாமல் என்றும் அறுவடைசெய்யாமல் என்றும் […]

English

Poetic Sketches of the Invisible: Claudia Rankine’s ‘Citizen: An American Lyric’

த. கண்ணன் · 12.10.18

You have been watching tennis for many years. You remember Martina Navratilova and Chris Evert, McEnroe and Conners on the wane; Boris Becker and Stefan Edberg, Steffi Graf and Gabriala Sabatani on the rise. Seles and Hingis. Agassi and Sampras. Even Ivanisevic and Jana Novotna. Federer and Nadal. Djokovic and Murray. You have moments and […]

எழுத்து

லேலி லாங் சோல்ஜர் (Layli Long Soldier)

த. கண்ணன் · 13.09.18

[லேலி லாங் சோல்ஜர் அமெரிக்காவின் பூர்வக்குடிகளுள் ஒன்றான லகோட்டா இனத்தைச் சேர்ந்த கவிஞர். அவரது Whereas, 38ஆகிய நீள் கவிதைகள் முக்கியமானவை. Whereas மிகவும் அடர்த்தியான கவித்துவ மொழியிலும், 38 மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, நேரடியான மொழியிலும் நுட்பமான அரசியல் பிரச்சனையை அணுகுகின்றன. Whereas என்ற தலைப்பில் அவரது கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. Whiting Writers விருது வென்றிருக்கிறார்.] ———————— இங்கு வாக்கியம் (sentence) மதிக்கப்படும். எழுத்துவிதிகள்வலியுறுத்துவதற்கு மதிப்பளித்து, ஒவ்வொரு வாக்கியத்தையும் கவனத்துடன் அமைப்பேன். உதாரணமாக, எல்லா […]