தமிழ்
நீண்ட காத்திருப்பு – லேவ் தல்ஸ்தோய்
இவான் டிமிட்ரிச் அக்சியோனோவ் என்ற இளம் வணிகன் விளாடிமிர் நகரத்தில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரு கடைகளும் ஒரு வீடும் சொந்தமாக இருந்தது. அக்சியோனோவ் வெளிர்நிற சுருண்ட தலைமுடியுடன் அழகாக இருந்தான். பாடுவதில் பெரும் விருப்பம் கொண்டவனாகவும் கொண்டாட்டம் நிரம்பியவனாகவும் இருந்தான். இளவயதில் குடிப்பழக்கமுடையவனாக, அதீதமாக குடித்தால் கலகம் செய்பவனாக இருந்தபோதிலும், திருமணமான பின் எப்போதாவது ஒருமுறை குடிப்பதைத் தவிர்த்து குடிப்பழக்கத்தை கைவிட்டிருந்தான். அப்போது கோடைகாலம். நீஜ்னி பொருட்காட்சிக்குப் புறப்பட்டுச் செல்வதற்காக தன் குடும்பத்தினரிடம் விடைபெறும் சமயம், “இவான் […]