இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி: மாண்டேக் சிங் அலுவாலியாவின் “Backstage”
பெரும்பாலான சமயங்களில், வரலாறு நிகழும்போது, அதைச் சமூகம் உணர்ந்து கொண்டாடுவதில்லை. காலம் கடந்து பின்னோக்கிப் பார்க்கையில்தான், அது புரிபடுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக நிகழ்ந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி அப்படிச் சமகாலத்தில் கொண்டாடப்படாத வரலாறு. ஆங்கிலேயர் வருவதற்கு முன்னால், இந்தியா உலகின் மிக வலுவான பொருளாதாரங்களுள் ஒன்றாக இருந்தது. வேளாண்மை, கைவினைத் தொழில், ஜவுளி போன்ற துறைகளில் மிக முன்னேறிய நாடாக இருந்தது. உலகப் பொருளாதாரத்தில், இந்தியாவின் பங்கு 24% ஆக இருந்தது. ஆனால், பல நூறு […]