Tag: பொன்முகலி

கவிதை

பொன்முகலி கவிதைகள்

பொன்முகலி · December 15, 2018

நீ என்னை காதலித்திருக்க வேண்டும். நீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிற ஒருவனை கரைக்கு இழுப்பவனின் தீவிரத்துடன். கழுத்தெலும்பு உடைபட்ட குதிரையை கருணைக்கொலை செய்பவனின் அனுதாபத்துடன். முற்றிலும் இலைகள் உதிர்ந்த ஒரு கருவேலமரத்தைப்போல, எவரையும் கிழித்துவிடும் கூரிய வன்மத்தின் முட்களோடு நான் இருந்திருந்தாலும், கனிந்த முகத்தோடு தனது மேடிட்ட வயிற்றை பரிவோடு வருடுகிற ஒரு கர்ப்பிணியைப் போல நீ என்னைத் தொடர்ந்து நேசித்திருக்க வேண்டும். __________________________________________________________ விண்மீன்கள் உன் கண்களாய் மாறி என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிற இவ்விரவில், நான் எப்படி […]