தமிழ்
எலனாரின் இல்லம் – வில்லா கேதர்
”அடுத்ததாக நீங்கள் ஃபார்ச்சூனிற்குச் செல்கிறீர்களா?” எனத் தொடங்கினாள் ஹாரியட். பதிலாக, தோட்டத்தின் ஒரு மூலையில் நீரூற்றின் அடிக்கிண்ணத்தில் இருந்த கசிவினை ஆய்ந்துகொண்டிருந்த ராபர்ட் வெஸ்ட்ஃபீல்டையும் ஹரால்டையும் நோக்கி அதிர்ச்சியான ஒரு பார்வையை வீசினாள் அப்பெண். அவ்வளவு நேரடியாக அப்படிக் கேட்டது குறித்து வருந்தினாள் ஹாரியட். ஏதெல் அதற்குப் பதில் கூறியபோது அது வார்த்தையாக அன்றி வெறும் காற்றாகவே வெளிப்பட்டது. ”நாங்கள் பிறகு போய்க்கொள்ளலாம் என நினைக்கிறேன். அங்கே அவனுக்கு மிகச் சிரமமாய் இருக்கும், உங்களுக்குத் தெரியும்தானே? அங்கே அவன் சென்று […]