Tag: குணா கந்தசாமி

எழுத்து

கதைநிலத்தின் விதைநெல்: இராசேந்திர சோழன் சிறுகதைகள்

குணா கந்தசாமி · December 22, 2020

இராசேந்திர சோழனுடைய எழுபத்து ஏழு சிறுகதைகள் தமிழினி பதிப்பகத்தால் ஏறத்தாழ ஆயிரம் பக்கத் தொகைநூலாகத் தொகுக்கப்பட்டு டிசம்பர் 2014-இல் வெளியாகியிருக்கிறது. அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரிலும் அவர் எழுதியிருக்கிறார் என்ற தகவல் இலக்கிய வாசகர்கள் ஏற்கெனவே அறிந்ததுதான். தன்னுடைய இலக்கிய – அரசியல் செயற்பாட்டின் நெடிய அனுபவத் திரட்சியோடு இந்தத் தொகைநூலுக்கு அவர் எழுதியிருக்கும் பின்னுரை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தொகுப்பை வாசித்து முடித்தபின் அவருடைய கதைகளைக் குறித்து எனக்குள் திரண்ட கருத்துகளும் தன் கதைகளைக் குறித்து அவரே சொல்லும் […]

எழுத்து

குணா கந்தசாமி கவிதைகள்

குணா கந்தசாமி · April 20, 2019

நீண்ட பெருமூச்சொன்று வெளியேறுகிறது  துயரமிக்க ரணங்களை தன்னில் சுமந்தவாறே முடங்கிக் கிடந்த மனசின் சிறகுகள் மெல்ல விரிந்து மேலெழும்புகின்றன தழும்புகள் தந்திருக்கிறது தாங்கும் தினவு பாழ் நிறைந்த காலத்தை எழுதி முடிக்கிறேன் என் நாட்குறிப்பில் ஆசுவாசக் கண்ணீர் அழகாய்த் தான் வைக்கிறது முற்றுப்புள்ளி. கணிதம் வியாபித்த உறவுகள்  லாபமிட்ட வெறிகொண்டலைய வெளியெங்கும் தூசிப்படலமாய் சூத்திரங்கள் மிதக்கின்றன சொற்கள் இடையில் கணிதக்குறிகள் புன்னகையாய்த் தளும்புகின்றன எல்லாமே வகுபட்டுக் கொண்டிருக்கின்றன எண்களால் மாயச்சரடாய் காற்றையும் திசைகளையும் சூழ்ந்திருக்கிறது முடிவிலி எப்போதும் […]