சிறுகதை
ஜீவா
ஆகஸ்ட் மாத வெயில் சூடேறத் தொடங்கும் காலை வேளை. ஓரறை ஓட்டுவில்லை வீடு அது. கதவுக்கருகில் படுத்திருந்த அப்பாயி தலையைத் தூக்கிப் பார்த்தது. அவள் வடித்து வைத்திருந்த சோற்றைத் தட்டில் போட்டு புகையடுப்பில் சுண்டிக்கிடந்த தக்காளிக்குழம்பை ஊற்றிக்கொண்டு ஜீவா திண்ணையில் அமர்ந்தான். “பாப்பாவை எழுப்பிவுடுய்யா…” “இன்னிக்கி பள்ளிக்கூடம் இல்லப்பாயி… வேலைக்குப் போறேன்…” “இதுகள படிக்கவச்சி கரையேத்தலான்னு பாத்தா மாசக்கணக்கா பள்ளிக்கூடத்த மூடி போட்டுட்டானுங்க… நோவுநோவுன்னு ஊரே பதறிக்கெடக்கு. எட்டடியானுக்கு ஒரு பொங்க பூச வச்சி, ஊர்க்கெடா வெட்டி […]