Tag: Dry September

எழுத்து

இலையுதிரும் காலம் – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · 24.02.22

I செப்டம்பர் மாத அந்திநேரத்து வானம் செக்கச் சிவந்திருந்தது. அறுபத்தி இரண்டு நாட்களாக ஒரு பொட்டு மழையில்லை. அந்த வதந்தி, அந்தக் கதை, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், காய்ந்த புல்லில் பற்றிய நெருப்பு போலப் பரவியது. செல்வி மின்னி கூப்பர், ஏதோவொரு கறுப்பினத்தவன், இருவரையும் பற்றியது. தாக்கப்பட்டார், அவமதிக்கப்பட்டார், அச்சுறுத்தப்பட்டார். யாருக்கும் உண்மையில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது ஒரு சனிக்கிழமை மாலை, முடி திருத்தும் கடையில் அவர்கள் கூடியிருந்தார்கள். கூரையில் இருந்த மின்விசிறி […]