Tag: The Bear Came over the Mountain

தமிழ்

மலையைக் கடந்து வந்த கரடி – ஆலிஸ் மன்ரோ

இல. சுபத்ரா · January 30, 2022

ஃபியோனா தன் பெற்றோரின் இல்லத்தில் வசித்துவந்தாள். அவளும் க்ராண்ட்டும் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுவந்த நகரத்தில் அது இருந்தது. மிகப்பெரிய அவ்வீடு, கூண்டுவடிவ வெளித்தள்ளிய ஜன்னலைக்கொண்டிருந்தது. விரிப்புகள் தரையில் கலைந்து கிடக்க, காபிக் கோப்பைகளின் அடிவளையங்கள் மேஜையின் மேற்பூச்சில் தழும்புகளாய்ப் படிந்திருக்கும் அவ்வீட்டினை ஒழுங்கற்றதும் சொகுசானதும் எனக் க்ராண்ட் எப்போதும் கருதியிருக்கிறான். ஐஸ்லாந்திய குணாதிசயங்கள் கொண்ட அவளது அம்மா, ததும்பும் வெண்கூந்தலையும் தீவிர இடதுசாரி அரசியலையும் வரித்தவர். நகரின் முக்கியமான இதய சிகிச்சை மருத்துவரான அவளது அப்பாவிற்கு, மருத்துவமனையில் நல்ல […]