Tag: The birthday of a failed revolutionary

தமிழ்

தோற்றுப்போன புரட்சியாளனின் பிறந்தநாள் – எட்கர் கீரத்

செங்கதிர் · August 29, 2021

ஒரு காலத்தில் செல்வந்தன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் பெரும் செல்வந்தன். அளவுக்கு மீறி பணம் வைத்திருப்பதாகச் சிலர் சொல்லிக்கொண்டார்கள். பல வருடங்களுக்கு முன்பு அவன் எதையோ புதிதாகக் கண்டுபிடித்திருந்தான் அல்லது யாரோ ஒருவர் கண்டுபிடித்திருந்ததைக் களவாடியிருந்தான். அது நடந்து ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டதால் என்ன நடந்ததென்று அவனுக்கே ஞாபகமில்லை. அந்தக் கண்டுபிடிப்பைப் பெரும் நிறுவனம் ஒன்றுக்கு ஏராளமான தொகைக்கு விற்றுவிட்டான். கிடைத்த பணம் மொத்தத்தையும் நிலத்திலும் நீரிலும் முதலீடு செய்தான். வாங்கிய நிலத்தில் சிறு சிறு கான்கிரீட் […]