Tag: அனாகத நாதம்

எழுத்து

அனாகத நாதம்

செந்தில் ஜெகன்நாதன் · January 30, 2023

முகூர்த்த நாள் என்பதால் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சுப காரியங்களுக்குச் செல்லும் பயணிகளால் தளும்பிக்கொண்டிருந்தன. நிலையத்தில் இருக்கும் வேப்ப மரத்தடியில் இளம்பெண்ணொருத்தி தன் எதிரில் நின்றிருந்த மனிதரிடம் கரங்களை அசைத்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அணைசு இல்லாத நாதஸ்வரம் போல நீண்டிருந்த ஜடை அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் துள்ளிக்கொண்டிருந்தது. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சாமிநாதனின் கவனத்தைக் கலைப்பதைப் போல வந்த ஆரன் சத்தம் கேட்டு முகத்தைத் திருப்பினான். சிதம்பரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்து மிகுந்த வேகத்துடன் […]