இல்புறம்
மங்கோலியா. ஒரு காலத்தில் முக்கால்வாசி ஆசியாவைத் தன் ஆளுகையை ஏற்கவைத்திருந்த பழம் பெருமை கொண்ட நாடு. இன்று சுற்றிலும் தலையெடுத்துவிட்ட நாடுகளுக்கிடையே கைகால்கள் விரித்து விசால வெளியென தேமேனென்று அதோ அங்கே மேலே கிடக்கிறது. மங்கோலியாவை எவரும் இன்று பொருட்படுத்துவதில்லை. வர்த்தகம் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. விடுமுறையில் சென்று பார்த்துவிட்டு வருவதில்லை. விவேக்கின் தந்தை மனிதருள் மங்கோலியா. இந்திய விடுதலைக்கு முன்பே பிறந்தவர். இன்றைய இஸ்ரேலைவிட வயதானவர். பாகிஸ்தானைவிடப் பாங்கானவர். நேபாளத்தைவிட நேசமானவர். மாண்டிநீக்ரோ நாட்டைவிட வயதான பேரன் […]