Tag: இதழ் 33

English

Maadan Redux – Jeyamohan

Nakul Vāc · August 29, 2021

In the lunar month of Aadhi1, on an auspicious day when the stars were aligned as per the dictates of Siddha Yoga, the Sudalai Maada2 God woke up. It made up its mind not to put up with it anymore and boiling with rage twirled its moustache. “Screech, screech!” it scraped its sword on an […]

தமிழ்

அகம் சுட்டும் முகம் (பகுதி 4): கே.ஜி.ஜார்ஜின் திரையுலகம்

எம்.கே.மணி · August 29, 2021

நல்ல விஷயங்களைப் பார்த்தால் சிலருக்குச் சும்மா இருக்க முடியாது. அதை நாசம் செய்துவிட்டுத்தான் அடங்குவார்கள் என்கிற பொருளில் வருகிற ஒரு வசனம் உண்டு. சதயம் படத்துக்காக எம்.டி.வாசுதேவன் அதை எழுதினார். ‘கோலங்கள்‘ (1981) என்கிற இந்தப் படத்தின் அடிப்படை அம்சம் இதுதான்.  மனிதன் எப்படியிருப்பான் என்பதைக் கணிக்க முடியாது. அவனுடைய பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கைச் சூழ்நிலை எல்லாம் சேர்ந்து அவனை என்னவாக உருட்டித் திரட்டி கூட்டத்தில் தூக்கி எறிந்திருக்கிறது என்பதைப் பிறர் அறிய மாட்டார்கள். அப்படி நூறு பக்கத்தில் […]

தமிழ்

தோற்றுப்போன புரட்சியாளனின் பிறந்தநாள் – எட்கர் கீரத்

செங்கதிர் · August 29, 2021

ஒரு காலத்தில் செல்வந்தன் ஒருவன் வாழ்ந்திருந்தான். அவன் பெரும் செல்வந்தன். அளவுக்கு மீறி பணம் வைத்திருப்பதாகச் சிலர் சொல்லிக்கொண்டார்கள். பல வருடங்களுக்கு முன்பு அவன் எதையோ புதிதாகக் கண்டுபிடித்திருந்தான் அல்லது யாரோ ஒருவர் கண்டுபிடித்திருந்ததைக் களவாடியிருந்தான். அது நடந்து ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டதால் என்ன நடந்ததென்று அவனுக்கே ஞாபகமில்லை. அந்தக் கண்டுபிடிப்பைப் பெரும் நிறுவனம் ஒன்றுக்கு ஏராளமான தொகைக்கு விற்றுவிட்டான். கிடைத்த பணம் மொத்தத்தையும் நிலத்திலும் நீரிலும் முதலீடு செய்தான். வாங்கிய நிலத்தில் சிறு சிறு கான்கிரீட் […]

கட்டுரை

அழுமூஞ்சிப் பொட்டணத்தை எள்ளல் கைகொண்டு பிரிப்பவன்: இசையின் கவிதைகளை முன்வைத்து

மனோஜ் பாலசுப்ரமணியன் · August 29, 2021

ஒரு முறை சத்தியமூர்த்தி (aka) கவிஞர் இசை சொன்னார், “விழுகுற அன்பு வந்து விழுந்தா போதும் நண்பா”. நான் துணுக்குற்றேன். அந்தச் சொல்லிணைவு என்னை வெகுவாகக் கவர்ந்தது. அன்பை ஏன் விழுதலுடன் இணைத்துச் சொன்னார்? அன்பை மழை என்று சொல்கிறாரா அல்லது மழைதான் அன்பா? தனித்தனியாக இயங்கும் போது சாதாரணமாக இருக்கும் சொற்கள், விசித்திரமான இணைவில் மிக அசாதாரணமான ஒன்றாக எழுகின்றன. “கவிதையின் அடிப்படை அலகு சொல்” – என்பதை இசையின் கவிதைகளில் அழுத்தமாகக் காணலாம். சென்ற […]

தமிழ்

எமிலிக்காக ஒரு ரோஜா – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · August 29, 2021

1 செல்வி எமிலி கிரியர்சன் இறந்தபோது ஊர் முழுமையும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது. விழுந்துவிட்ட நினைவுச் சின்னம் ஒன்றுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்கள் சென்றார்கள். வீட்டுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காகப் பெண்கள் சென்றார்கள். தோட்டக்காரன், சமையல்காரன் என இரண்டு வேலைகளையும் செய்துவந்த வயதான ஆண் வேலைக்காரனைத் தவிர கடந்த பத்து வருடத்தில் யாருமே அந்த வீட்டின் உட்புறத்தைப் பார்த்ததில்லை. அது ஒரு பெரிய சதுரச் சட்டகம் போன்ற அமைப்பைக்கொண்ட வீடு. ஒரு காலத்தில் வெண்ணிறமாக […]

கவிதை

கார்த்திக் நேத்தா கவிதைகள்

கார்த்திக் நேத்தா · August 29, 2021

நாதக் காம்பு எழுநூறு வருடப் பழைய மணியின் ஒலியில் துளியும் முதுமையில்லை. கைக்குழந்தையின் துள்ளல் அதன் ஒலி. பாலுண்ட கன்றுக்குட்டியின் மூச்சின் நன்றி போன்றது சீரான அதன் அதிர்வு. மணியைப் பார்த்தவாறே அமைதியாக அமர்ந்திருந்தேன் கோயில் தரையில். ஆட்டுக்குட்டியின் மடிக்காம்பு போல அசைந்தது எழுநூறு வருடப் பழைய மணியின் நா. * தொழுகை இந்த அழுகை ஆற்றாமையினது அன்று. அடைந்துவிட்ட சிறகமைதி. உள்நின்ற சுவையின் உயர் நிலை. கருணை கொண்ட விழிகளில் கட்டி நிற்கும் பேராண்மை. இந்த […]

தமிழ்

அதீத அப்பாவியாக இருப்பதன் அபாயம் – பால்சாக்

விஜயராகவன் · August 29, 2021

மாண்ட்கண்ட்டூர் பிரபு தீரமிக்கப் போர்வீரர் ஆவார். ஆஞ்ஜு (Anjou) சமஸ்தான சீமானின் மாட்சிமைக்காக நடந்த போரில் இவர் தன் தைரியத்தை வெளிப்படுத்தி மத வெறியர்களை வென்றதால் இவருக்கு இந்தப் பட்டப்பெயரைப் பின்னர் மன்னராக முடிசூட்டிக்கொண்ட ஆஞ்ஜுவின் சீமான் அளித்தார். ஊவ்ரே (Vouvre) பிரதேசத்தில் கட்டப்பட்ட கோட்டைக்கும் இப்பெயரே வாய்த்தது. இந்தப் போர்வீரருக்கு இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் நல்ல கத்தோலிக்கர்கள்தாம். இதில் மூத்த மகன் அரசவையில் இடம்பெற்றிருந்தார். புனித பார்த்தோலோமியோவின் தினத்தை முன்னிட்டு என, தந்திரமான உபாயமாக […]

கவிதை

ஆசை கவிதைகள்

ஆசை · August 29, 2021

இன்மையைச் சுண்டக் காய்ச்சுதல் பேரண்டத்தின் பிறப்பு பற்றிஒரு புத்தகம் படிக்கிறாய் அதற்கு முன் இடம் இல்லைஅதற்கு முன் காலம் இல்லைஅதற்கு முன் பிறப்பு இல்லைஅதற்கு முன் இறப்பு இல்லைஅதற்கு முன் மேல் இல்லைஅதற்கு முன் கீழ் இல்லைஅதற்கு முன்…எவ்வளவு கவித்துவம்எவ்வளவு ஆழம் இன்மைஒரு இருத்தலைப் பிறப்பித்ததுஎன்ற வரியைத் தாண்ட முடியாமல்வியந்துபோய்அப்படியே நிற்கிறாய் இன்மையைத் தியானிக்கிறாய்இன்மையை ஒரு அடுப்பில் வைத்துச் சூடு பண்ணுகிறாய்எவ்வளவு கொதிக்க வைத்தும்உன்னால் இன்மையைச் சலனப்படுத்த முடியவில்லைஅதிலிருந்து இருத்தலைப் பிறப்பிக்க முடியவில்லை அது உனக்குயாரோ தந்த […]

சிறுகதை

காணிக்கை

இராசேந்திர சோழன் · August 29, 2021

மழை, கொட்டும் மழை! பின்னும் மூன்று நாட்களாக விடாது தொடர்ச்சியாக அடிக்கடி சடசடத்தும் பிசுபிசுத்தும் பெய்யும் மழை. ‘பாழும் மானம் எப்பதான் தெறக்குமோ?’ ராசாத்தி அலுத்துக்கொண்டாள். ஒரே பிள்ளை. செல்லப் பிள்ளை. ஜுரமாகக் கிடக்கிறாள். ஸ்மரணையில்லாமல் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறாள். மருந்து மாத்திரை சங்கதி ஒரு பக்கம் கிடக்கட்டும். கதகதப்பாகப் படுக்க வைக்க ஒரு இடம் உண்டா… ராசாத்தி என்ன பங்களாவாசியா, கதவையும் ஜன்னலையும் இறுக்கிச் சாத்திவிட்டு கம்பளிப் போர்வைக்குள் பிள்ளையை அவையம் வைக்க! கடைநிலைவாசிகூட இல்லை. நடைபாதைவாசி. […]