Tag: இலையுதிர் காலத்து மழை

சிறுகதை

இலையுதிர் காலத்து மழை

கமல தேவி · July 1, 2023

இந்த இரவு என்றில்லை, ஒவ்வொரு இரவுமே இப்படித்தான் இருக்கிறது. இரவைக் கழிக்க வேண்டும், பகலைக் கடக்க வேண்டும். இரவில் என்னவாகும் என்று இந்த நகரத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் பதற்றம். சாமானிய மக்களின் தினப்படி வாழ்வில் அரசியல் தீவிரமானால் அந்த நாட்டு மக்கள் நல்ல வாழ்க்கை வாழவில்லை என்று அப்பா சொல்வார். அப்பா கொந்தளிப்புகளை விரும்பாத மனிதர். இளம் வயதில் அவர் மீது எனக்கு அத்தனை எரிச்சல் இருந்தது. என்ன மனிதர் இவர்? சப்பாத்திகளும் வெண்ணெயும் முட்டைகளும் மேசையில் […]