Tag: உயர்ந்த மனிதர்கள்

தமிழ்

உயர்ந்த மனிதர்கள் – வில்லியம் ஃபாக்னர்

கார்குழலி · January 30, 2022

இருளைப் பூசிக்கொண்டு நின்ற பஞ்சாலையைக் கடந்ததும் உள்ளே விளக்கு எரிந்துகொண்டிருந்த அந்த வீடும் அதன் வாயிலில் நிறுத்தப்பட்ட மருத்துவரின் காரும் தெரிந்தன. உரத்த குரலில் நாய் குலைத்தது.  “இதோ வந்துவிட்டோம்!” என்றார் வயது முதிர்ந்த துணை காவல் அலுவலர். “அந்த இன்னொரு கார் யாருடையது?” இருவரில் இளையவர் கேட்டார். அவர் புதியவர், அந்த மாகாணத்தின் புலனாய்வாளர். “மருத்துவர் ஸ்கோஃபீல்டுடையது,” என்றார் காவல் அலுவலர். “நாம் வருகிறோம் என்பதை மேக்கெல்லமிடம் லீ தொலைபேசியில் சொன்னபோது அவரை அனுப்பிவைக்கச் சொன்னார்.” […]