சிறுகதை
காணிக்கை
மழை, கொட்டும் மழை! பின்னும் மூன்று நாட்களாக விடாது தொடர்ச்சியாக அடிக்கடி சடசடத்தும் பிசுபிசுத்தும் பெய்யும் மழை. ‘பாழும் மானம் எப்பதான் தெறக்குமோ?’ ராசாத்தி அலுத்துக்கொண்டாள். ஒரே பிள்ளை. செல்லப் பிள்ளை. ஜுரமாகக் கிடக்கிறாள். ஸ்மரணையில்லாமல் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறாள். மருந்து மாத்திரை சங்கதி ஒரு பக்கம் கிடக்கட்டும். கதகதப்பாகப் படுக்க வைக்க ஒரு இடம் உண்டா… ராசாத்தி என்ன பங்களாவாசியா, கதவையும் ஜன்னலையும் இறுக்கிச் சாத்திவிட்டு கம்பளிப் போர்வைக்குள் பிள்ளையை அவையம் வைக்க! கடைநிலைவாசிகூட இல்லை. நடைபாதைவாசி. […]