அறம்பிறழ்ந்தோரிற் கடையோன்
Operation Finale என்றொரு படம் நெட்பிளிக்சில் உள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் பார்த்தேன். சுமாரான நாஜி வேட்டைப் படம்தான். யூதர்களை அழித்தொழிக்கும் இறுதித் தீர்வை வடிவமைப்பதில் முதன்மையானதொரு பங்காற்றிய அடால்ஃப் ஐக்மேன் (Adolf Eichmann) அர்ஜெண்டினாவில் குடும்பத்தோடு மறைந்து வாழ்ந்துகொண்டிருந்தார். மொசாடைச் சேர்ந்த யூத உளவாளிகள் அவரைக் கைப்பற்றி இசுரேலுக்குக் கடத்தி வருவதுதான் படம். மூன்று காரணங்களுக்காக அப்படம் மனதில் நின்றது. முதல் காரணம், ஐக்மேன் அவ்வளவு பெரிய அழித்தொழிப்பு குறித்த குற்றவுணர்வு அற்றவராகவே பெரும்பாலும் வருவார். தன்னைச் […]