உடையாது காத்திருந்த குமிழிகள்
எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ள அமுதா ஆர்த்தியின் பருந்து சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினான்கு சிறுகதைகள் உள்ளன. ஆம்பக்காய் சிறுகதையைத் தவிர மற்ற எல்லாக் கதைகளுமே அருமையாக உள்ளன. இந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கதை என்று எதையும் தனித்துச் சொல்வது சிரமம். ஆனாலும் சைக்கிள் சவுட்டு, நெகிழிக் கனவு, அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும் ஆகிய கதைகளை நான் முன்னிறுத்துகிறேன். சைக்கிள் சவுட்டு கதை ஊரில் நான்கு நாட்கள் நடக்கும் சைக்கிள் சவுட்டு (தொடர்ந்து சைக்கிள் விடுவதும் அதை […]