சிறுகதை
லலிதாம்பிகை
பெசண்ட் நகர் மின் மயானத்தில் பார்த்த சிலைதான் அதுவென்பது அம்மோன நிலையிலும் எனக்குத் துலக்கமாக நினைவில் இருந்தது. பாதித் தூக்கத்திலும் இருந்தேன் அப்போது. அதற்கு முன் இந்தப் பெயரை அந்த நிறத்தில் யோசித்ததே இல்லை. கன்னங்கரிய மார்பிள் கல்லில் செதுக்கப்பட்ட பூரணமான சிலை. கையில் குழந்தையொன்றை ஏந்தியிருந்தது. கழுத்தில் மட்டரகமான பச்சை நிறத்தில் பாசி மணிமாலை தவழ்ந்தது. நெற்றியில் நாணயம் அளவிற்குச் சிவந்த பொட்டு. கையில் இருக்கிற குழந்தையின் முகத்தில் புன்னகை தென்பட்டது. லலிதாம்பிகையின் முகத்தை நெருக்கத்தில் […]