அந்த நீர்தான், அதே நீரன்று: வி.அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’
நவீன மனிதனின் மெய்யியல் தேடல்களை விவரிக்கும் நாவல்கள் தமிழில் பெரிய அளவில் இல்லை. சிலர் உடனே ‘ பொய்த்தேவில்’ வரும் சோமு முதலியைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். லௌகீகத்தின் தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் துறவையோ அல்லது அதற்கு நிகரான காவி வேஷத்தையோதான் தமிழின் பல நாவல்கள் ஆன்மீகம் என்ற பெயரில் பேசியிருக்கின்றன. ஜெயகாந்தன் காவியை உடுத்தியவுடனே ஒருவனைச் சகலமும் அறிந்த ஞானியாக்கி விடுவார். அந்தச் சாமியாரின்/ பைத்தியக்காரனின் ஆணவம் நிரம்பிய அலட்டலான சவுக்கடிக்கு முன் சாதாரண மனிதன் ஒடுங்கி […]