Tag: ஸ்ரீதர் நாராயணன்

சிறுகதை

புதிய நிலம்

ஸ்ரீதர் நாராயணன் · December 26, 2019

அந்த ஞாயிற்றுக் கிழமையை அப்படியே தொந்தரவு செய்யாமல், அதன் போக்கில் விட்டுவிட வேண்டும் எனத் தான் சரிதா விரும்பினாள். வாரயிறுதி நாட்களில் பொழுது போக்குவது சற்று சிரமமாகத் தான் இருந்தது. கல்லூரிக் காலங்களிலும், புதிய இடங்களில் அவள் பெரும்பாலும் தனி ஆளாகத் தான் இருந்திருக்கிறாள். ஆனால், இவ்வளவு தூரம் தனிமையை உணர்ந்ததில்லை. தற்போதைய வேலையா அல்லது இந்த மனநிலையா என்று தெரியவில்லை. கடந்த ஆறு மாத காலமாக அவளை எந்த விஷயத்திலும் நாட்டம் காட்ட விடாத ஒரு […]

சிறுகதை

கத்திக்காரன்

ஸ்ரீதர் நாராயணன் · September 20, 2019

ஒரு சனிக்கிழமை மாலை, விஜிக்குட்டியின் படுத்தல் தாளாமல் தான் தங்கராஜ் அந்த சர்க்கஸிற்கு சென்றான். பிக் ஆப்பிள் சர்க்கஸ் எனப் போட்டிருந்தார்கள். முந்தின நாளின் ஜேஸ்டன்வில் ஹெரால்டு பத்திரிகையில் பத்து சதம் தள்ளுபடி கூப்பன் ஒன்று கொடுத்திருந்தார்கள். விஜிக்குட்டிக்கு இன்னமும் நான்கு வயது முடியாததால் டிக்கெட் கிடையாது. வழக்கமாக, கோடை விடுமுறைக் காலத்தில் ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் ஏதாவது கார்னிவெல் போடுவார்கள். இந்த முறை இந்த சர்க்கஸ் போட்டிருந்தார்கள். சர்க்கஸ் கூடாரத்தின் முகப்பில் வெட்டிப்போட்ட தழைகளைத் துதிக்கையால் வளைத்து […]