நிர்வாணம்
தங்கக்கொப்புளம் போலச் சுடர் அசைவற்று நின்றிருந்தது. கையிலோ காலிலோ மினுமினுவென்று மினுங்குமே.. அதுபோல ஒன்றல்ல, பல கொப்புளங்கள் கருவறைக்குள். விளக்குகளில் குண்டுமணி போலப் பொன் கொப்புளங்கள் மினுங்கியதைப் பார்த்துக்கொண்டேயிருந்ததில் கண்ணெதிரே வட்ட வட்டப் பொன்துகள்கள் பறப்பது போன்ற உணர்வு. பக்கவாட்டு வாசற்படியில் புறாக்கள் தத்தின. இளஞ்சிவப்பு நிறக் கால்கள் மெலிந்த கீரைத் தண்டுகளை நினைவூட்டின. கற்கூரை இடப்பட்ட உட்பிரகாரம் குளிர்ந்து கிடந்தது. படிக்கட்டுகள் ஈரமாயிருந்தன. யாரோ அலம்பிவிட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே ஒரு சேரளவு தண்ணீர் தேங்கியிருந்தது. கன்னம் வைத்துப் […]