Category: மொழிபெயர்ப்பு

எழுத்து

தீ வளர்க்க… – ஜாக் லண்டன்

ராஜேந்திரன் · September 13, 2018

நாள் சாம்பல் நிறத்தில் குளிராகத் துவங்கியது. அந்த மனிதன் பிரதான யூக்கான் தடத்திலிருந்து விலகி அங்கிருந்த சரிவின் மேலேறிய போது குளிர் மிதமிஞ்சியிருந்தது. வானம் ஆழ்ந்த சாம்பல் நிறத்துடன் காணப்பட்டது. அந்த சரிவின் உச்சியில் சொற்ப அளவிலேயான பயணிகள் செல்கிற, கண்களுக்குத் தெளிவாகப் புலப்படாத மற்றொரு தடம் கிழக்கு நோக்கிச் சென்றது. செழித்து அடர்ந்து வளர்ந்திருந்த ஊசியிலை மரங்களின் ஊடாக அத்தடம் அமைந்திருந்தது. செங்குத்தான அந்த சரிவின் மீதேறியதும் அதன் உச்சியில் நின்று மூச்சு வாங்கியவாறு தனது […]

எழுத்து

நல்ல வாசகரும் நல்ல எழுத்தாளரும் – விளாதிமிர் நபக்கோவ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் · September 13, 2018

நேசத்தோடும், விவரங்களை நீட்டித்தும் பல ஐரோப்பிய பெரும்படைப்புகளை நேசத்தோடு அணுகும் என்னுடைய திட்டத்திற்கு, பல்வேறு ஆசிரியர்களைக் குறித்த இந்த பல்வேறுபட்ட கலந்துரையாடல்களுக்கு, “நல்ல வாசகராக இருப்பது எப்படி” அல்லது “ஆசிரியர்களிடத்திலான கனிவு” – இதுபோல ஏதோவொன்று ஒரு துணைத்தலைப்பை வழங்கும் பணியாற்றும்.  நூறாண்டுகளுக்கு முன்பு ஃபிளபர்ட் அவருடைய மனைவிக்கு எழுதிய கடிதத்தில் பின்வரும் குறிப்பைச் சொல்கிறார்: Comme I’on serait savant si I’on connaissait bien seulement cinq a six livres: “அரைடஜன் புத்தகங்களை […]

எழுத்து

அந்தக் குரங்குகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? – கை டாவன்போர்ட்

நம்பி கிருஷ்ணன் · September 13, 2018

புல்வெளிகள் இம்ப்ரஷனிசம் தன் அந்தரங்க நோக்கத்தை, அதனை அறிந்திராத காரணத்தால், ரகசியமாய் வைத்திருந்தது: சாலைகள் குறித்த மனவுருவம். சாலை, ஆறு, பாதை இல்லாத இம்ப்ரஷனிஸ்ட் கான்வாஸ் ஒன்றைக் காண்பது அரிது. எதிர்பார்க்க முடியாத இடங்களில் ரயில்கள் தோன்றுகின்றன, அம்மாக்களுக்கும் பெண்களுக்கும் பின்னால், அமைதியும் அழகும் ஆனந்தமும் நிறைந்த ஆதர்ச கிராமிய சித்திரங்களின் பின்னணியில், தொலைவில். உண்மைதான், ஐரோப்பிய வரலாற்றில் முதல்முறையாக சாலைப் பயணம் பாதுகாப்பானதாக இருந்தது, முன் எப்போதும் இல்லாத வகையில் வர்த்தகம் விரிவடைந்து கொண்டிருந்தது. மொனே […]

எழுத்து

குரங்கு வளர்க்கும் பெண் – லியோனார்டு மைக்கேல்ஸ்

க. மோகனரங்கன் · August 13, 2018

பியர்டு தனது விவாகரத்துத்திற்குப் பிறகான அவ்வருடத்தின் இளவேனிற் பருவத்தில், தனியாக ஜெர்மனியில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது இங்கர் என்ற இளம் விலைபெண்ணிடம் காதலில் வீழ்ந்தவன், தொடர்ந்து மேற்கொள்ளவிருந்த தனது பயணத்திட்டங்களை ரத்துசெய்தான். அவர்கள் இரண்டு தினங்களை, பெரும்பாலும் பியர்டின் விடுதி அறையிலேயே ஒன்றாகக் கழித்தனர். பகலிலும் இரவிலும் சாப்பிடுவதற்காக மட்டும் அவளை உணவகங்களுக்கு அழைத்துச் சென்றான். மூன்றாம்நாள் இங்கர் தனக்கு சற்று அவகாசம் தேவைப்படுவதாக பியர்டிடம் கூறினாள். பியர்டு வருவதற்கு முன்பு அவளுக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. […]

எழுத்து

கடல் கிழவனுடன் ஒரு நாள்

எம்.கோபாலகிருஷ்ணன் · July 9, 2018

1934ம் ஆண்டின் இனிய இளவேனிற்காலத்தில் மின்னபோலீஸ் ட்ரிபியூன் பத்திரிகையின் இளம் நிருபர் அர்னால்ட் சாமுவேல்சன், அமெரிக்க இலக்கியப் பிதாமகர்களில் ஒருவரான எர்னஸ்ட் ஹெமிங்வேயை சந்திப்பதற்காக மின்னசோட்டாவிலிருந்து ஃப்ளோரிடாவுக்குச் சென்றார். ஹெமிங்வே எழுத்தைக் குறித்து சில விஷயங்களையேனும் தன்னோடு பகிந்து கொள்வார் என்று அவர் நம்பினார். ஹெமிங்வேயின் விருந்தோம்பல் அவர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பானதாக இருந்தது. இந்த உரையாடல் நிகழ்ந்தபோது ஹெமிங்வேயுடன் தான் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தங்கியிருக்கப் போகிறோம் என்பது அவருக்குத் தெரியாது. ஹெமிங்வேயின் படகான […]