Category: மொழிபெயர்ப்பு

எழுத்து

கடற்கரையில் ஒரு நாடகம் – பால்ஸாக் – தமிழில்: ராஜேந்திரன்

கோகுல் பிரசாத் · 27.12.19

ஏறத்தாழ அனைத்து இளைஞர்களும் ஒரு திசைமானியை அவர்களது கற்பனையில் வைத்துள்ளனர். அதைக் கொண்டு எதிர்காலப் பாதையை நிர்மாணிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். திசைமானியை விரித்துப் பரந்த கண்ணோட்டத்தில் பார்வையைச் செலுத்தும் வேளையில், அதற்கேற்ற மன உறுதியும் வாய்த்து விட்டால் உலகமே அவர்களுடையதாகும். இருப்பினும் ஒருவரது உள்ளார்ந்த வாழ்வில் நிகழும் அந்த அதிசயம் இளமைப் பருவத்திற்கே உரியதாகும். அது இருபத்தியிரண்டு முதல் இருபத்தியெட்டு வயதிற்குள்ளாக அனைவருக்கும் வாய்க்கும். அக்காலக் கட்டத்தில் மாபெரும் எண்ணங்களும், புதிய சிந்தனைகளும் தோன்றும். ஏனெனில் அது […]

எழுத்து

நிதி சால சுகமா? – மலையாள மூலம் : T.பத்மநாபன்

மா.கலைச்செல்வன் · 12.07.19

அறையில் பூரண அமைதி நிலவியது. இராமநாதன் சன்னலருகே அமர்ந்திருந்தார். வேட்டி மட்டுமே உடுத்தியிருந்தார். மெலிந்த அவரது உடம்பில் பூணூல்  நிலையான ஓர் உறுப்பைப் போன்று ஒட்டிக் கிடந்தது. அவர் எதையோ ஆலோசனை செய்து கொண்டிருந்தார். ஆலோசனைக்கு நடுவே மெதுவாக ஏதோ முணுமுணுத்தவாறு நடுங்குகின்ற தனது கை விரல்களால் கால் முட்டிகளில் தாளமிட்டார். இராமநாதனுக்கு முன் அமர்ந்திருந்த இளைஞரும் மௌனமாகவே இருந்தார். ஆனால் அவரது மௌனம் அதிகம் பேசப்படுவதாகவே அமைந்திருந்தது. இராமநாதன் கூறப்போகும் பதிலுக்காக அவர் ஆவலோடு காத்திருந்தார். […]

எழுத்து

புகைப்படங்கள் வழியே இருண்மையாக, அமெரிக்கா – சூசன் சாண்டாக்

நம்பி கிருஷ்ணன் · 18.03.19

கலாச்சாரத்தின் வருங்கால ஜனநாயக அகல்பரப்புக் காட்சிகளை, பீர்கையில் வால்ட் விட்மன் அழகிற்கும் அழகின்மைக்குமிடையே, சாரத்திற்கும் சாரமின்மைக்குமிடையே உள்ள வேறுபாட்டிற்கு அப்பால் பார்க்க முனைந்தார். பெருந்தன்மையான தரப்பிரித்தல்களைத் தவிர மற்ற தகவுப் பாகுபாடுகள் அனைத்துமே கண்மூடி அடிமைத்தனமாகவோ அல்லது மேட்டிமைத்தனமாகவோ அவருக்குத் தோன்றியது, நம் கலாச்சார புரட்சியின் அதிதீரமும், அதிபித்தும் வாய்ந்த கவிஞர் கபடில்லாத நேரடித்தனத்தின் மகோன்னதங்களை அதிகமாகவே பறைசாற்றினார். அமெரிக்க வாழ்வனுபவத்தின் ‘அனைத்தையும் அரவணைத்து’க் கொள்ளும் குணத்தையும், அதன் வீரியத்தையும் ஏற்று அதன் நிதர்சனத்தை ஆரத் தழுவிக் […]

எழுத்து

சங்கேதங்களும் குறியீடுகளும் – விளடீமர் நபக்கவ் – தமிழாக்கம் : கால சுப்ரமணியம்

கால.சுப்ரமணியம் · 17.02.19

1 இப்படியான இந்த வருடங்களில், நான்காவது தடவையாக, குணப்படுத்தவே முடியாதபடிக்குச் சீர்குலைந்துவிட்ட சித்தத்தையுடைய இளைஞனுக்கு, பிறந்த நாள் பரிசாக எதைத் தருவது என்ற பிரச்சனையை அவர்கள் மீண்டும் எதிர்கொண்டார்கள். அவனுக்கு என்று தனி விருப்பம் எதுவும் கிடையாது. மனிதனால் படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களும், எந்தப் பிரயோஜனமும் அற்ற இந்தக் குணரூப உலகின் அனைத்து வசதிகளும், அவனுக்குத் தீமையின் தேனடைகளாகவே தோன்றின. அவற்றில் குரோதத்துடன் அலை பாய்ந்து ரீங்கரிப்பவை, அவனால் மட்டுமே அறியக்கூடிய விதத்தில் இருந்தன. அவனைப் புண்படுத்தக்கூடிய […]

எழுத்து

சக்திதேவன் – சமஸ்கிருத மூலம் : சோமதேவர் / தமிழாக்கம் : டாக்டர் வே. ராகவன்

டாக்டர் வே. ராகவன் · 17.02.19

(‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி‘ என்று சி.என். குப்புசாமி முதலியார் 1911-ல் எழுதிப் பிரசித்தமான நாவலுக்கும் அதை அடிப்படையாகக் கொண்டு பின்பு 1947-ல் வந்த திரைப்படத்துக்கும் மூலமாய் அமைந்த கதை) மாநிலத்திற்கே அணியான வர்த்தமானம் என்ற நகரத்தில் பகைவரை வாட்டுபவனான பரோபகாரி என்ற அரசன் இருந்தான். உயர்ந்த தன்மையனான அவ்வரசனுக்கு, மேகத்தின் மின்னலைப் போன்றவளும் ஆனால் மின்னலின் நிலையின்மை என்ற குறையில்லாதவளுமான, கனகப்பிரபை என்ற பட்டமகிஷி இருந்தாள். அவ்வரசனுக்கு அந்த கனகப்பிரபையிடம், மகாலக்ஷ்மிக்குத் தன் அழகிலுள்ள கர்வத்தை […]

எழுத்து

புத்துயிர் அமுதம்! – பால்ஸாக்

ராஜேந்திரன் · 13.01.19

டான் யுவான் பெல்விடாரோ ஒரு குளிர்கால மாலையில், பகட்டான ஃபெராரா மாளிகையில் எஸ்தே குடும்பத்தைச் சார்ந்த இளவரசருக்கு விருந்தளித்தார். அக்காலத்தில் மாளிகை விருந்தோம்பல் என்பது மலைக்க வைக்கும் நிகழ்வாகும். அதற்கு மிதமிஞ்சிய பெரும் செல்வம் அல்லது அதிகாரமிக்க பெரும் பதவி போன்றவை இன்றியமையாதவை. விருந்தினர் அறையிலிருந்த சுவர்களில் சிகப்புக் காரை பூசப்பட்டிருந்தது. அவற்றிலிருந்த வியத்தகு ஓவியங்களில் காணப்பட்ட பளிங்குக் கற்களின் வெண்மை எடுப்பாகத் தோற்றமளித்தது. விலையுயர்ந்த துருக்கிய தரை விரிப்புகளிலிருந்து மாறுபட்ட அழகை அந்த ஓவியங்கள் தந்தன. […]

எழுத்து

மெக்ஸிகன் – ஜாக் லண்டன்

ராஜேந்திரன் · 15.12.18

அவரது சரித்திரம் யாருக்கும் தெரியாது. அதிலும் ஜன்டாவிற்குத் தெரிய வாய்ப்பேயில்லை. அவர் அவர்களது ‘இளம் புதிர்.’ ‘பெரும் அபிமானி.’ நிகழவிருக்கும் மெக்ஸிகோ புரட்சிக்கு ஜன்டாவினர் எந்தளவு பாடுபட்டார்களோ, அதே போல அவரும் அவரது வழியில் பாடுபட்டார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். அவர்களில் ஒருவருக்குக்கூட அவரைப் பிடிக்கவேயில்லை. பல அலுவல்களில் பரபரப்பாயிருந்த, கூட்டம் நிறைந்த அறைக்குள் அவர் நுழைந்த அன்றே அவரை ஒற்றர் என்றும், டயஸின் உளவுப் படையினரால் அனுப்பப்பட்ட கைக்கூலி என்றும் ஜன்டாவினர் எண்ணினர். […]

Uncategorized

என் மக்களுக்காக – மார்கரெட் வாக்கர்

த. கண்ணன் · 15.12.18

ஒப்பாரிகள் குறும்பாடல்கள் நாட்டுப்பாடல்கள் (ப்ளூஸ்) வாழ்த்துப்பாக்கள் என்று எங்கும் தமது அடிமை கீதங்களை மீண்டும்மீண்டும் பாடிக்கொண்டும், அறிந்திராக் கடவுளிடம் இரவுதோறும் தம் துதிகளால் துதித்துக்கொண்டும், காண்பரிய சக்திக்குத் தம் கால்மடித்துப் பணிந்துகொண்டும் இருக்கும் என் மக்களுக்காக வருடங்களுக்கு – கடந்த வருடங்களுக்கும், நிகழ் வருடங்களுக்கும், வரக்கூடும் வருடங்களுக்கும் தம் வலுவை வழங்கிக்கொண்டும் துவைத்தும் தேய்த்தும் சமைத்தும் துடைத்தும் தைத்தும் திருத்தியும் களைந்தும் உழுதும் தோண்டியும் நட்டும் செதுக்கியும் சீரமைத்தும் இழுபட்டுக்கொண்டு என்றும் ஈட்டாமல் என்றும் அறுவடைசெய்யாமல் என்றும் […]

எழுத்து

அன்பு செலுத்த வழிகள் ஏராளம்

வி.அமலன் ஸ்டேன்லி · 15.12.18

ஜென் குரு பெர்னி க்ளாஸ்மேன் (Bernie Glassman) நவம்பர் ஐந்தாம் தேதி, ஞாயிறன்று அமெரிக்காவின் மேஸசுஸெட்ஸில் காலமானார். ஜென் அமைதி படைப்போர் (Order of Zen Peacemakers) மற்றும் கிரேஸ்டோன் (Greystone) அமைப்பின் ஸ்தாபகரான இவர் வீதியோர தியானக்கூடுகை (Street Retreats), கோமளித்தனம் (Clowning), மூழ்குதல் (plunge) சாட்சியம் பகிர்தல் (Bearing Witness) போன்ற புதுமையான ஜென் கருத்தாக்கங்களை உருவாக்கி சமூகத்தின் அடிமட்ட, பிற்படுத்தப்பட்ட, பாராமுகம் காட்டப்படும், போரினாலும் வறுமையினாலும் துன்பப்பட்டு வரும் மக்களின், ஆதரவற்றோரின் யதார்த்தங்களை, ஜென் […]

எழுத்து

சிறிதளவு இறைச்சி – ஜாக் லண்டன்

ராஜேந்திரன் · 14.11.18

ரொட்டியின் கடைசி விள்ளலால் மிச்சமிருந்த மாவு க்ரேவியை துடைத்து வழித்துத் தட்டைக் காலி செய்த டாம் கிங், நிதானமாக ஆழ்ந்த யோசனையுடன் அதனை சுவைத்துத் தின்றார். அவர் மேஜையிலிருந்து எழுந்த போது பசியாறவில்லை என்னும் உணர்வு அவரை வாட்டியது. எனினும் அவர் மட்டுமே உணவருந்தியிருந்தார். மற்றொரு அறையில் இரண்டு பிள்ளைகள் படுத்திருந்தனர். இரவு உணவை சாப்பிடவில்லை என்பதை மறந்து விடும்படி விரைவாக அவர்கள் உறங்க வைக்கப்பட்டிருந்தனர். அவரது மனைவி ஒன்றையும் தொடவில்லை. அமைதியாகக் கணவரைப் பரிவுடன் பார்த்தவாறிருந்தார். […]

எழுத்து

முதியோர் சாசனம் – ஜாக் லண்டன்

ராஜேந்திரன் · 12.10.18

ஒரு மனிதரின் மரண தண்டனை குறித்த வழக்கு விசாரணை, படை வீரர்களின் குடியிருப்பில் நடைபெற்று வந்தது. அந்த மனிதர் வயோதிகர். அவர் வெள்ளை மீன் நதி பாய்ந்தோடி விழும் லே பார்ஜ் ஏரியின் கீழுள்ள யூக்கான் பிரதேசத்தின் பழங்குடியினரில் ஒருவர். அந்த வழக்கு குறித்து டாவ்சன் நகர் முழுவதும் பதற்றத்தில் ஆழ்ந்தது. அதே போல் யூக்கான் பிரதேசத்தின் மேலும் கீழும், சுமார் ஆயிரம் மைல்கள் வரையிலும் அதே பதற்றம் நீடித்தது. அந்நியர் நிலம் திருடி, கடல் திருடி […]

எழுத்து

படமெடுத்தாடும் பாய்மரங்களும் மரக்கலக் கொத்தளங்களும் : திரைகடலோடிய சகாப்தங்களில் இந்தியப் பெருங்கடலும் சில வழக்கொழிந்த மொழிகளும் – அமிதவ் கோஷ்

கால.சுப்ரமணியம் · 12.10.18

பாய்மரக்கலங்கள் ஓடியாடிய சகாப்தத்தில், இந்தியப் பெருங்கடல் பகுதியில், அராபியர், சீனர், கிழக்கு ஆப்ரிக்கர், ஃபிலிப்பினோக்கள், மலேயர், தென்னாசியாக்காரர் ஆகிய சுதேசிக் கடலோடிகள், “லஸ்கர்” என்ற ஒரு இனக்குழுவை உருவாக்கினார்கள். பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், உண்மையிலேயே பல்வேறு இனத்தவர் கலந்து நிறைந்த இந்தக் குழு, ‘லஸ்கரி‘ மொழியை உலகுக்கு அளித்தது. பைபிளில் வரும் பேபல் கோபுரத்தில் நடந்தது போல் ஆங்கிலம், மலாய், ஹிந்துஸ்தானி, சீனம், மலையாளம் என்று கப்பல் தளத்தில் பேசப்பட்ட எல்லா மொழிகளையும் கலந்து, மரக்கலங்களைச் செலுத்த […]