Tag: ஆத்மார்த்தி

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 10): தனியாவர்த்தன மின்னல்கள்

ஆத்மார்த்தி · June 24, 2021

“Music is the language of the spirit. It opens the secret of life bringing peace, abolishing strife.” – Kahlil Gibran சகஜமும் அந்தரங்கமும் பொங்கிப் பெருக்கெடுக்கும் குரல் உமா ரமணனுடையது. புதிய குரல்களின் தேவைக்கும் வருகைக்கும் இடையிலான தொடர்பு கவனிக்கத்தக்கது. எப்போதெல்லாம் கவன மாற்று ஒன்று அவசியமாகிறதோ அது வரையில் பெரும் செல்வாக்கு பெற்ற குரல்களே போதுமானதாக இருந்துவரும். திடீரென்று ஒரு பாடலின் சூழல் அந்தக் குறிப்பிட்ட பாடலை யாருக்கு […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 9): ராஜாவின் பாடகர்கள்

ஆத்மார்த்தி · April 25, 2021

தொழில்முறைப் பாடகர்களைப் பாட வைப்பதன் பின்னே இரகசிய விநோதங்கள் பல உண்டு. பாடுவதற்கான செயல்முறை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். உதாரணமாகச் சொல்வதானால் ஒரு பாடகர் புதிய பாடலொன்றைப் பாடுவதற்கான முன்தயாரிப்புக் காலம், அதாவது ஒத்திகைக் காலம் எத்தகையது என்பதைப் பொறுத்து அவருக்குப் பாடக் கிடைக்கிற பாடல்களின் எண்ணிக்கை அமையும். சிலருக்கு அரிதான, வனப்பான குரல்வாகு அமைந்திருக்கும். ஆனால் ஒரு பாடலை முழுவதுமாகப் பாடுவதற்கு அவர்கள் எடுத்துக்கொள்கிற நேரம் மிக மிக அதிகமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு வேறொரு பிரச்சினை […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 8): ராஜாவின் கவிஞர்கள்

ஆத்மார்த்தி · March 28, 2021

மனித வாழ்வில் இசையின் பங்கு அளப்பரியது. நிஜத்துக்கும் கனவுக்கும் இடையிலான உப கண்ணிகளை நிரப்பித் தருவதில் இசைக்கு முக்கிய இடமுண்டு. மனிதன் தன் கனவைத் திரும்பத் திரும்பத் தொடர்புறுவதற்கான சாதனமாக இசை மீதான பற்றுதல் விளங்குகிறது. இசையைத் தன் கனவுகளின் அடுத்தடுத்த சித்திரங்களாக எண்ணிக்கொள்வது இரசனையின் விளைவாகக் கிடைக்கிற நல்லீடு. நிலம், காலம், சூழல், கதை மாந்தரின் தன்மை, வாழ்க்கை அனுபவம், கதை பாடலோடு பொருந்தி நிற்கிற புள்ளியிலிருந்து பாடல் நிறைவடைகிற புள்ளி வரையிலான கதா நகர்வு, […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 7): ராஜாவின் பாடல்கள்

ஆத்மார்த்தி · February 27, 2021

இசை என்பது தன் வடிவம், உள்ளடக்கம், வாத்தியத் தேர்வு, வழங்குமுறை, நகர்திசை, புறச்சப்தங்களின் பங்களிப்பு, அகவுணர்வுகளைப் பிறப்பிப்பதற்கான முன்னுரிமை, இருப்பு மற்றும் நீக்கம் ஆகிய இரட்டைத் தன்மைக்குள் குரல்களின் இயங்குமுறை எனப் பல கூறுகளை அடிப்படையாகக் கொண்டு காலத்திற்கேற்ப மாறிவருகிறது. இளையராஜாவுக்கு முன்னும் பின்னுமாய்த் திரை இசையை இரண்டாய்ப் பகுத்துப்பார்க்கும் போது அவருடைய முதலிசைக் காலமாக 1990ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தைச் சொல்லமுடியும். அதன் பின்னர் இளையராஜாவின் அடுத்தகால இசையை நோக்கிய தேடல் காலமாகக் கொள்ளலாம். அந்த […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 6): இளையராஜாவும் எஸ்.பி.பியும் – வரலாற்றில் இருவர்

ஆத்மார்த்தி · January 25, 2021

தேவைப்படுகிற துல்லியத்தில் எந்தவொரு பாடலையும் பதிவு செய்வதுதான் இசையமைத்தலின் முக்கியக் கட்டம். ஒவ்வொரு பாடலுக்கும் அதற்கென நிலையான செல்திசைப் பின்னணி ஒன்று அமையும். மேடைக் கச்சேரிகளிலோ நேர்முகப் பேட்டியிலோ இசையுடனோ இன்றியோ பாட முனையும்போது அந்தப் பாடலின் பதிவுக் கணத்திற்குத் திரும்பச் சென்று அங்கே நின்றபடி பாடுவதுதான் துல்லியமான மறுநிகழ்தலை வாய்த்துத் தரும். பாடல்களை அவற்றின் பதிவுத் துல்லியத்தோடு எப்போதும் பாடுவது இயந்திரத்தாலன்றி மனித எத்தனத்தால் முடியாத ஒன்றுதான். முன்பே சொல்கிறாற் போல் எந்தப் பாடலையுமே அதனதன் யதார்த்தப் புள்ளியிலிருந்து […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 5): மொழிபெயர்ந்த மழை

ஆத்மார்த்தி · December 22, 2020

தமிழ்த் திரையுலகத்தின் பிரதிபிம்ப நிலமே தெலுங்குத் திரையுலகம். தமிழைவிட வணிகப் படங்கள் மீதான வாஞ்சை பெருகி ஒளிரும் மொழி தெலுங்கு. இன்னொரு புறம் தீவிரமான கலைப்பற்றுதலுடனான படங்களுக்கும் குறைவிருக்காது. இங்கே எம்.ஜி.ஆர் ஆளவந்தார் என்றால் அங்கே என்.டி.ராமராவ். இன்றைக்கு ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா என இரண்டு மாநிலங்களாக மாறி இருக்கிறது டோலிவுட். இந்தியாவின் பிராந்திய மொழிகளில் செல்வாக்கான மொழி தெலுங்கு. சினிமா அக்கட தேசத்தில் அடிக்சன். அதீதமும் இயல்புமாகப் பெருக்கெடுக்கும் செலுலாய்ட் வெள்ளம் தெலுங்கு சினிமா. இசையைப் […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 4): மண்ணில் விரிஞ்ஞ நிலா – இளையராஜாவின் மலையாளப் படங்களை முன்வைத்து

ஆத்மார்த்தி · September 25, 2020

கர்நாடக சங்கீதத்தின் மீது பிற எந்தத் தென் மாநிலத்தை விடவும் அதிகப் பற்றுகொண்ட திரைமாநிலம் கேரளம். எல்லா விதமான படங்களும் உருவாகி வருகிறதான திரைக்கதை, படவுருவாக்கத்தின் மறு எல்லையில் இசையைப் பொருத்தவரை பாரம்பர்யத்தின் வேர்வரை ஆழப் பற்றிக்கொள்கிற ஆதார மனோபாவம் குறிப்பிடத்தக்கதாகிறது. மண் சார்ந்த கலைகள், தொன்மங்கள், தங்களுக்கு உரிமைப்பட்ட இசை என்பனவற்றைப் பற்றியெல்லாம் அவ்விடத்திற்கென்று தனித்த பாலிஸிகள் உண்டு. போனி எம்-மையும் மைக்கேல் ஜாக்ஸனையும் ப்ரிட்னி ஸ்பியர்ஸையும் இரசித்துக்கொண்டே தங்கள் ஆதர்ஸ மாற்றத்தை நிகழாமல் பேணி […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 3): வழித்தடங்களும் வரைபடங்களும்

ஆத்மார்த்தி · August 24, 2020

எம்.ஜி.ஆர் – சிவாஜி இரு துருவப் போட்டி ஒரு பக்கம். இயக்குநர்கள் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர் இருவருக்கும் தனித்த இரசிகர்கள் இருந்தார்கள். ஏ.சி.திருலோக்சந்தர், பி.மாதவன், எஸ்.பி.முத்துராமன், தேவராஜ் மோகன், சிவி.ராஜேந்திரன், கே.ஷங்கர், கே.விஜயன் எனப் பல கமர்சியல் இயக்குநர்களுக்கென்று தொடர்ந்த பட வரத்துகள் இருந்தன. எழுபதுகளின் மத்தியில் இந்திய சினிமாவில் நிகழ்ந்த மாபெரும் ஆளுமை உருவாக்கங்கள் என்று இளையராஜா, பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஜே.மகேந்திரன் ஆகிய நால்வரைச் சொல்லலாம். தமிழ் சினிமாவின் அடுத்தகட்டப் பாய்ச்சலைக் கரமேற்று களம் கண்டவர்கள் இவர்களாகவும் […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 2) : ராஜா பாடிய பாடல்கள்

ஆத்மார்த்தி · July 20, 2020

ஒரு பாடல் அதை உருவாகிய போதோ, வெளியான பிறகோ அது அடைந்த பிரபலத்துக்குப் பொருத்தமற்ற வியப்பொன்றை உருவாக்குவது அரிய நிகழ்வு. அது ஏன் வென்றது என்பதற்கான தனியான காரணம் தேவையில்லை. முன் சொன்ன வியத்தல் அந்தப் பாடலின் பின்னுறையும் புதிர்களின் விடையாகவும் மாறும். இசையமைப்பாளராக வெற்றிகரமான இடத்தை, தான் அறிமுகமான தினத்திலிருந்தே பெறத் துவங்கி விட்ட இளையராஜா, எண்பதுகளின் ஆரம்பத்தில் தென் இந்தியாவின் பெருவிருப்பத்துக்குரிய திரை ஆளுமைகளில் ஒருவரானார். அவருடைய இணைப்பும் இசையேற்பும் நிச்சயமான வெற்றியின் அச்சார […]

எழுத்து

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 1) : இளையராஜாவின் முதல் ஐந்து ஆண்டுகள்

ஆத்மார்த்தி · June 16, 2020

இளையராஜா தொழில்முறை இசை அமைப்பாளர்களின் பெயர்ப் பட்டியலில் பெருமதிப்புக்கு உரிய பெயர். திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி 45 ஆண்டுகளில் ஆயிரம் படங்களைக் கடந்து தயாரிப்பாளர்-பாடலாசிரியர்-பாடகர் எனப் பல முகங்களைக் கொண்டிருக்கக் கூடியவருடைய படங்களையும் பாடல்களையும் கலைத்து அடுக்கி அவரது பங்கேற்பு குறித்தத் தோரணம் ஒன்றைக் கட்டமைக்கலாம் என்கிற நெடுங்கால ஆசையின் எழுத்தாக்கமே இந்தப் பத்தி. தரவுகளும் அவதானங்களும் கைக்கொண்டபடி இளையராஜாவின் இசை உலகத்தைச் சற்று நெருங்கிப் பார்க்க விழையும் முயல்வு இளையராஜாவின் முதல் படம் […]