Tag: ஆத்மார்த்தி

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 11): வாணி ஜெயராம் – அரிதாய் நிகழும் அற்புதம்

ஆத்மார்த்தி · 10.10.22

ஒரு தனிப்பட்ட அந்தரங்கமான அனுபவம் ஒன்றைக் கலையின் ஊடாக ரசிகனுக்குக் கடத்துவது என்பது உண்மையாகவே ஒரு சவால். பெருமளவு கலைஞர்கள் இப்படிப்பட்ட அனுபவச் சாத்தியத்தைப் பெரிதாக எடுத்துக்கொண்டு முயலுவதில்லை. அவர்களது கலைச் செயல்பாட்டின் நோக்கம், ஒரு தேவை அல்லது எதிர்பார்ப்பை நோக்கியதாக அமைவதும்கூட அதற்குக் காரணமாக இருந்துவிட முடியும். விதிவிலக்காக வெகு சில கலைஞர்கள் தங்களது மேதைமை மற்றும் தனித்துவத்தின் வெளிப்பாடாக இப்படிப்பட்ட அனுபவக் கடத்தலைச் சாத்தியம் செய்வார்கள். அப்படியான கலைஞர்தான் வாணி ஜெயராம். எப்போதும் பாடல் […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 10): ஷங்கர் மகாதேவன் – கடலாழமும் மலையுச்சியும்

ஆத்மார்த்தி · 30.08.22

சீர்காழி கோவிந்தராஜனும் கண்டஸாலாவும் சேர்ந்து பாடினால் ஒரு பாடல் என்ன மாதிரி பரவசத்தை நல்குமோ அப்படி ஒரு குரலாய் ஒலித்தார் ஷங்கர் மகாதேவன். அவர் குரலை 2000ல் ரிதம் படப் பாடலான தனியே தன்னந்தனியே பாடலின் போது கேட்டதற்கும் 1999 ஆம் ஆண்டு களஞ்சியம் இயக்கத்தில் வெளியான நிலவே முகம் காட்டு படத்தில் இடம்பெற்ற சிட்டு பறக்குது குத்தாலத்தில் பாடலின் போது கேட்டதற்கும் பல வித்தியாசங்கள். இளையராஜா அந்தப் பாடலுக்குத் தேர்ந்தெடுத்துக் குழைத்திருந்த இசைவார்ப்பு ஃப்யூஷன் வகைமையிலானது. ஒருமித்த தீர்மானத்தை எப்போதும் ரத்துசெய்துகொண்டே இருக்கவல்லதான ஃப்யூஷன் […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 9): எண்பதுகளில் சங்கர் கணேஷ்

ஆத்மார்த்தி · 25.07.22

திரையிசை உலகத்தின் சரித்திரத்தை எழுதிப் பார்க்கையில் முக்கியமான காலகட்டம் 1980கள் எனலாம். இசையின் உள்ளும் புறமும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இசை என்றில்லை, கதை வசனம் தொடங்கிப் படங்களின் வழங்குமுறை வரைக்கும் பற்பல மாற்றங்கள். கருப்பு வெள்ளை என்கிற இருவண்ணப் படங்கள் முற்றிலுமாகத் தம் வீரியத்தை இழந்த காலமும் அதுவே. வண்ணத்தை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைமை உருவானது. ஸ்டீரியோபோனிக் ஒலிகள் காற்றை ஆளத் தொடங்கின. வானொலியின் பேரரசில் தொலைக்காட்சி எனும் புதிய அத்தியாயம் தொடங்கியது. […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 8): இசையில் இருவர் – சங்கர் கணேஷ்

ஆத்மார்த்தி · 25.04.22

சங்கர் – கணேஷ் இருவரும் திரையிசை உலகில் பரபரப்பாக கிட்டத்தட்ட இருபத்து மூன்று வருட காலத்திற்கு மேலாக இயங்கியவர்கள். சங்கர் ராமன், இசை மேதை சி.ஆர்.சுப்பராமனின் உடன் பிறந்தவர். அவரது மறைவுக்குப் பிறகு எம்.எஸ்.வி.யிடம் இசைக்கலைஞராகத் தன் திரைவாழ்வைத் தொடங்கியவர். கணேஷூம் எம்.எஸ்.வி.யிடம் பணிபுரிந்தவரே. இந்த இருவரும் சேர்ந்து இசையமைப்பில் ஈடுபடத் தொடங்கி முதல் படமாக நகரத்தில் திருடர்கள் என்ற படத்திற்கு இசையமைத்தனர்.அந்தப் படம் முழுவதும் வளரவில்லை. அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கவியரசர் கண்ணதாசன் இந்த இருவரின் இசை மீது […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 7): தனிமையின் பாடகன் – ஹரீஷ் ராகவேந்திரா

ஆத்மார்த்தி · 04.03.22

தனிப்பாடல்களுக்குத் திரைப்படங்களின் உள்ளே பேரிடம் உண்டு. இன்னும் சொல்வதானால் காதல் பாடல் என்று தவிர்க்க முடியாத ஒரு இடத்தை எல்லாப் படங்களிலும் எடுத்துக்கொள்ளக்கூடிய டூயட் சேர்ந்திசை பாடல்கள்கூட கதையில் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் தனிப்பாடல்களை முழுவதுமாக அப்படிச் சொல்லித் தள்ளுவதற்கில்லை. கதையோடு கூடியெழுகிற மனத்தின் குரலாக ஒலிப்பவை தனிப்பாடல்கள். கதாபாத்திரத்தின் எண்ண வெளிப்பாடாக உள்ளார்ந்த உதடுகளைத் திறந்து பாட முனைவதாக அமைக்கப்பட்டவை பல தனிப்பாடல்கள். இரசிகன் ஒருவன் பெரும்பாலும் டூயட் பாடல்கள் வரும்போது எழுந்து செல்வதைக் காட்டிலும் […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 6): பி.ஜெயச்சந்திரன்

ஆத்மார்த்தி · 30.01.22

பளியத் ஜெயச்சந்திரன் (எ) பி.ஜெயச்சந்திரன் 03.03.1944 அன்று பிறந்தவர். சிறுவயது முதலே இசையார்வம் கொண்டவர். அவருடைய இன்ஸ்பிரேஷன் கே.ஜே.ஏசுதாஸ். இருவருமே தமிழில் மிகவும் கொண்டாடப்படுகிற கேரளக் குரலாளர்கள் என்பதில் தொடங்கி, பேசுவதற்குப் பல விஷயங்கள் உண்டு. ஜி.தேவராஜன் இசையில் ஸ்ரீ நாராயண குரு (1986) மலையாளப் படத்திற்காக ஒரு டூயட் உட்பட மூன்று பாட்டுகளை ஜெயன் பாடியிருக்கிறார். அந்தப் படத்தில் சிவசங்கர சர்வ சரண்ய விவோ எனும் சோலோ அவருக்குச் சிறந்த பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றுத் […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 5): ஹரிஹரன்

ஆத்மார்த்தி · 24.12.21

“ஹரிஹரன் என்னிடம் கேட்டால் என் வலது கையை வெட்டித் தருவேன்”, “என் உயிரையே தருவேன்” என்றெல்லாம் சொன்னவர்களைச் சந்தித்திருக்கிறேன். தொண்ணூறுகளின் ஆகச்சிறந்த பாடகர் என்று முதன்மையாக ஹரிஹரனைக் குறிப்பிட்ட பிறகுதான் வேறு யாரைப் பற்றியும் யோசிக்கவே முடியும். ஒன்பது மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கும் ஹரிஹரன் ஹிந்துஸ்தானி இசையில் தனக்கெனத் தனித் தடங்களை ஏற்படுத்தியவர். தொழில்முறைப் பாடகர்கள் யாரை விடவும் மிக அதிகமான சூப்பர் ஹிட் பாடல்களைச் சினிமாக்களில் பாடியவர். ஹரிஹரனின் குரல் மெடாலிக் தன்மையும் நம்ப […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 4) : மலேசியா வாசுதேவன்

ஆத்மார்த்தி · 25.11.21

மலேசியா வாசுதேவன் ஒரு தொடுவானத் தென்றல். வாசுவின் குரல் இருக்கிறதே அது மிக மிக உன்னதமான வித்தியாசமான முழுமையான போதுமான ஒரு குரல். அதனால் ஒரு சோர்விலாப் பறவை போல் எந்த மலை உச்சிக்கும் சென்று திரும்ப முடியும். பிடிவாதம் குன்றாத நெடுங்கடல் மீன் ஒன்றினைப் போல் எம்மாதிரியான ஆழத்தையும் தொட்டுப் பார்த்து மீள முடியும். அடைய முடியாத எல்லைகளுக்குத் தன்னை விரித்துக்கொள்வது அபாரம். மலேசியா வாசுதேவன் குரல் பூரணம். பெருகிக் கடலான நதி. ரஜினியை நாயகத் […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 3): ஷ்யாம்

ஆத்மார்த்தி · 28.09.21

19.03.1937 அன்று சென்னையில் அவதரித்த சாமுவேல் ஜோசப் என்கிற இயற்பெயரைக் கொண்ட ஷ்யாமுக்கு அந்தப் பெயரை வழங்கு பெயராக்கியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. தக்ஷிணாமூர்த்தி, சலீல் சவுத்ரி, ஆர்.டி.பர்மன், டி.ஜி.லிங்கப்பா, ராஜேஸ்வர ராவ், பெண்டியால நாகேஸ்வர ராவ், சலபதி ராவ் போன்ற இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் சியாம். எம்.பி.சீனிவாசன், ஆர்.பார்த்தசாரதி, தக்ஷிணாமூர்த்தி, எஸ்.எம்.சுப்பையா, விஸ்வநாதன் ராமமூர்த்தி எனப் பல புகழ்வாய்ந்த இசையமைப்பாளர்களிடம் வயலின் கலைஞராக வேலை பார்த்த அனுபவம் மிக்கவர். முதல் படம் மாடர்ன் […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 2): வி.குமார்

ஆத்மார்த்தி · 29.08.21

இசை பிரபஞ்சத்திற்கு ஒரு ஆன்மாவையும், மனதிற்குச் சிறகுகளையும், கற்பனைக்கு விமானத்தையும், எல்லாவற்றிற்கும் வாழ்வையும் தருகிறது என்பது ப்ளேட்டோவின் கூற்று. இசை நம்மை உணர்வுப்பூர்வமாகத் தொடுகிறது. வார்த்தைகளால் அது முடியாது என்றார் ஜானி டிப். மொஸாட்டின் பார்வை நூதனமானது. இசை என்பது இசைக்குறிப்புகளில் இருப்பதல்ல. மாறாக இருபுறமும் அணைக்கும் நிசப்தத்தில் இருப்பது என்கிறார். தல்ஸ்தோய் சொன்னது எனக்கு மிகவும் உவப்பான இசைமொழி. “இசை என்பது உணர்வுகளின் சுருக்கெழுத்து”. என்ன அற்புதமான சொல்லாடல்? ஜிமி ஹென்றிக்ஸ் சொல்வதுதான் சரி. இசை […]

எழுத்து

இசையின் முகங்கள் (பகுதி 1): கமல்ஹாசன்

ஆத்மார்த்தி · 27.07.21

1 இசை மானுட வாழ்வின் வினோதம். உணர்வுகளின் துல்லியத்துக்கும் உணர்தலின் நுட்பத்துக்கும் இடையிலான பெருங்கால அலசலை இசை சாத்தியப்படுத்துகிறது. சுயத்தில் மூழ்கிக் கனிந்தபடி திரும்பி வராத பாதையின் இருளே ஒளியெனப் புறப்பட்டுச் செல்கிற தீராப் பயணம் இசை. இருந்த இடத்திலிருந்தபடி நாடோடியின் உலாவலைப் பரிசளிப்பது இசையின் வசீகரம். இசையில்லாத திசையிலிருந்தபடிதான் இந்தப் பிரபஞ்சத்தின் அழிதல் தொடங்கும். இசையே இறை. இசையின்றி வாழ்வில்லை. “Music is the one incorporeal entrance into the higher world of […]

எழுத்து

உப்பு மலையின் நுனி

தென்றல் சிவகுமார் · 27.07.21

“காஃபி தாகம் எடுக்குது” என்பாள் எனதொரு தங்கை. அயர்ச்சியை இதைவிட அழகாகச் சொல்ல முடியாதென்று தோன்றும் எனக்கு. பால்யத்திலிருந்து பதினுக்கு, பதினிலிருந்து உலகுக்கு என்று பகுதிப் பகுதியாக நிகழ வேண்டியது மனித வாழ்வின் நகர்வு. இதனைச் சிதைத்து, வரம்புகளை அழித்து, வாழ்க்கை ஆனந்தை அவன் பால்யத்திலிருந்து நேராக உலகுக்குள் தள்ளிவிடுகிறது. உலகின் ஒளியிலிருந்து விலகி, தனக்கு விதிக்கப்பட்ட இருளுக்குள் சென்றவன், மீண்டு உலகுக்குள் திரும்பும்போது இருளடைத்த மங்கல் ஒளியே அவனுக்கு எஞ்சுகிறது. ஒருவனது மொத்த வாழ்க்கையில் ஒரு […]