Tag: இதழ் 1

தலையங்கம்

பாரத மாலைகள்

கரு. ஆறுமுகத்தமிழன் · July 9, 2018

130 கோடி நபர்களோடு  மக்கள் தொகையில் உலகத்தின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா தான் பெண்கள் பாதுகாப்பில் உலகத்திலேயே மிகவும் அடிமட்டத்தில் இருக்கும் நாடு என்று இராய்ட்டர்சு அறிக்கை அறிவிக்கிறது. போரால் அடியுண்டு கிடக்கும் ஆப்கானிசுத்தானமும் சிரியாவும் அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றனவாம். அறிக்கை வெளிவந்த பிறகு, ‘அது ஒன்றும் ஆதாரத் தகவல்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அறிக்கையில்லை; மேம்போக்கான கருத்துக் கணிப்புதான்; ஆகவே செல்லாது செல்லாது’ என்று பதறுகிறது நடுவண் அரசு. 2007இலிருந்து 2016க்குள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் […]

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · July 9, 2018

What to read and what to watch is subjective. But any gentleman would say, “Suggestions are welcome”. Sicario, Day of the Soldado has already released in Chennai. I loved the first part of the series and the trailer of second part was also promising. As I haven’t watched it yet, please wait till August! So, […]

கட்டுரை

பழந்தமிழகத்தில் மெய்யியல்

கணியன் பாலன் · July 9, 2018

கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் பூதவாதம் பிராமணர்கள் கற்கத்தகுந்த மதிப்புடைய தத்துவமாக இருந்தது எனவும் அதனைப் படிப்பதற்காக வடஇந்தியத் தத்துவ அறிஞர்கள் தமிழகம் வந்தனர் எனவும் பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் அவர்கள் கூறும் செய்தி, புத்தர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பூதவாதம் என்கிற பொருள்முதல்வாதக் கருத்துகள் மிகவும் புகழ்பெற்ற, மிகவும்செல்வாக்குடைய கருத்துகளாக இருந்து வந்தன என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் தென்னாட்டில் வழங்கிவந்த தத்துவங்களில் மிகவும் தொன்மையானது உலகாயதம் என்று தென்னாட்டுத் தத்துவங்களை ஆய்வு செய்த தத்துவ அறிஞர் […]

சிறுகதை

தீட்டு

போகன் சங்கர் · July 9, 2018

செருப்பைக் கழற்றிவிட்டு தார்சாலில் ஏறியதும் வழக்கத்துக்கு மாறான பரபரப்போடு அக்கா எழுந்து வந்தாள். இல்லாவிட்டால் அவள் வந்ததை அறியாதவள் போல அந்தி கருத்தும் தலையைக் கூட முடியாமல் டிவியையே வெறித்துக் கொண்டிருப்பாள். உண்மையில் அதிலும் என்ன ஓடுகிறது என்று நிறுத்திக் கேட்டால் தெரியுமா என்பது சந்தேகமே. கோமதி அவளை எத்தனையோ முறை திட்டியிருக்கிறாள். ‘’எப்பவும் தீட்டுக்காரி மாதிரி தலையைக் கட்டிக்காம உக்காந்திரு. பிறகு இந்த வீடு விளங்கறதுக்கா’’ வழக்கமாய் உள்ளறையிலிருந்து கேட்கும் மெல்ல தனக்குத்தானே ஆச்சி பாடும் தேவாரப்பதிகங்கள் […]

கட்டுரை

உலக மகாகவி: கதே

இரா. குப்புசாமி · July 9, 2018

என் வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டிகளாக, வெளிச்சத்தை வீசிய ஒளிவிளக்குகளாகத் திகழ்ந்த என் ஆசான்கள் அனைவருக்கும் நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்துவது எனது வழக்கம்; பேச்சாலோ எழுத்தாலோ செயலாலோ. எனது 28ஆவது வயதில் என் முதல் மகன் பிறந்தான். அவனுக்கு நான் இட்ட பெயர்: கதே. ஏன்? ஒவ்வொரு முறை அவனைப் பார்க்கும்பொழுதும், அவனது பெயரைச் சொல்லி அழைக்கின்ற பொழுதும் என் இலட்சியத்தை நான் நினைவுகூர வேண்டும் என்று விரும்பினேன். அந்த இலட்சியப் பாதையிலிருந்து நான் விலகலாகாது என்ற விழிப்பு […]

தமிழ்

மிதவை நாடகம்

கோகுல் பிரசாத் · July 9, 2018

உச்சக்காட்சியைத் தவிர்த்து ஆதி முதல் அந்தம் வரை கதையை எழுதி வைப்பது ஒரு வகை. அதற்கு விக்கிப்பீடியாவும் தமிழும் தெரிந்தால் போதுமானது. படம் பார்க்கும் போது இன்ன இன்ன உணர்ச்சிகளும் சிந்தனைகளும் தோன்றின என எழுதுவது இன்னொன்று. சிந்தனைகள் கூட அல்ல, எண்ணச் சிதறல்கள். அவை அந்தப் படத்திலிருந்து பெற்றுக் கொண்டவையாகவோ நமது நனவிலியின் கூட்டுத் தொடர்ச்சியாகவோ கூட இருக்கலாம். கதையல்ல, காட்சித்துளிகளின் (shots) ஒருங்கிணைவே திரைப்படம். நிகழ்வுகளின் (incidents) தொகுப்பாக ஒரு திரைப்படத்தை அணுகுவதைக் காட்டிலும் தருணங்களின் […]

கவிதை

கண்ணகன் கவிதைகள்

கண்ணகன் · July 9, 2018

உன் தூரிகையிடம் ஒரு கேள்வி பிறையை வேண்டுமெனில் நீ தலைகீழாக வரையலாம் நிலவை? * வலைஞனே, நதிக்குள்ளிருந்து எதையேனுமன்றி ஒருபோதும் பிடித்திழுக்கவே முடியாது நதியை * நீரில் கோபுரம் கோபுரத்தில் வாழும் புறாக்களுக்கென்ன? சிட்டுக் குருவிகளுக்குத்தான் தேவை சுயமாய் ஒரு கூடு ஒரு கூடு சுயமாய் சிட்டுக் குருவிகளுக்குத்தான் தேவை புறாக்களுக்கென்ன? கோபுரத்தில் வாழும் * தரு தழைத்த பின் கிளைகளின் மொழியில் ததும்பும் ஜீவிதம் மௌனம் கனிந்த விதையின் தியான தரிசனம் * நேற்று சற்று […]

கட்டுரை

முன்னம் அவனது நாமம் கேட்டேன்

மானசீகன் · July 9, 2018

அந்தக் கதை இப்படித்தான் துவங்கும். ‘கேத்தரின் ‘என்கிற பெயர் ஒரு தேவதைக் கதை வழியாக  ஒரு சிறுவனுக்கு அறிமுகமாகும். அன்றிலிருந்து அந்தப் பெயரை காதலிக்கத் தொடங்கி விடுவான். ஒவ்வொரு நாளும் விதவிதமாக அந்தப் பெயரைச் சொல்லிப் பார்ப்பான். அதைச் சொல்லிப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு நறுமணம் தன்னைச் சூழ்ந்து கொள்வதாக அவனுக்கு ஒரு பிரமை தட்டும்.அந்தப் பெயரால் விரியும் முடிவற்ற சாத்தியங்களின் வழியேஅவன் தன் பிரக்ஞையை நழுவ விட்டிருப்பான். கல்லூரி படிக்கும் போது ஒரு பெண்ணை […]

தமிழ்

கடல் கிழவனுடன் ஒரு நாள்

எம்.கோபாலகிருஷ்ணன் · July 9, 2018

1934ம் ஆண்டின் இனிய இளவேனிற்காலத்தில் மின்னபோலீஸ் ட்ரிபியூன் பத்திரிகையின் இளம் நிருபர் அர்னால்ட் சாமுவேல்சன், அமெரிக்க இலக்கியப் பிதாமகர்களில் ஒருவரான எர்னஸ்ட் ஹெமிங்வேயை சந்திப்பதற்காக மின்னசோட்டாவிலிருந்து ஃப்ளோரிடாவுக்குச் சென்றார். ஹெமிங்வே எழுத்தைக் குறித்து சில விஷயங்களையேனும் தன்னோடு பகிந்து கொள்வார் என்று அவர் நம்பினார். ஹெமிங்வேயின் விருந்தோம்பல் அவர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பானதாக இருந்தது. இந்த உரையாடல் நிகழ்ந்தபோது ஹெமிங்வேயுடன் தான் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தங்கியிருக்கப் போகிறோம் என்பது அவருக்குத் தெரியாது. ஹெமிங்வேயின் படகான […]

English

The Politics of Authenticity

K.Arvind · July 9, 2018

Why do people consider a lying demagogue – someone who deliberately tells lies and breaks publicly-endorsed norms while appealing to private prejudices – as authentic? The 2016 U.S. Presidential Elections presented us with this puzzle. It is no surprise to any of us that politicians lie and that they often do so to further their […]

கட்டுரை

வேதமும் ஆயுர்வேதமும்

சுநீல் கிருஷ்ணன் · July 9, 2018

1 முன்பொரு காலத்தில் அருந்தவம் புரிந்த துறவிகளை அவர்களுடைய இறுதி இலக்கான வீடுபேறை அடைய விடாமல் நோய்கள் சூழ்ந்து வாட்டின. செய்வதறியாது திகைத்த முனிவர்கள் ஆத்ரேயர் தலைமையில் இந்திரனிடம் தங்கள் குறையை முறையிட்டனர். உலக உயிர்கள் பிணியின்றி வாழ இந்திரன் அவர்களுக்கு ஆயுர்வேதத்தை பாடம் சொன்னான். இந்திரனுக்கு தக்கனும், தக்கனுக்கு அஸ்வினி குமாரர்களும், அஸ்வினி குமாரர்களுக்கு நான்முகனும் ஆயுர்வேதத்தை பாடம் சொன்னார்கள். பிரம்மன் ஆயுர்வேதத்தை படைக்கவில்லை எல்லையற்ற ஞானத் தொகையிலிருந்து நினைவு கூர்ந்தான் – ஆயுர்வேதம் மண்ணுக்கு […]

English

Changing Trends in Football

Rajanna · July 9, 2018

Football, the most played and most watched game in the world, is currently celebrating its carnival season in Russia. The once-in-four-years carnival usually throws a lot of surprises. In Russia 2018, Germany, Argentina, Spain have already been eliminated at the early stages. While elimination of major players happens infrequently in major tournaments, elimination of three […]