டாக்டர் ஜீவா – சில நினைவுகள்
‘ரிஷ்யசிருங்கர்’ எனும் ஈரோடு ராஜேந்திரன் “டாக்டரைப் பாக்கலாம் வாங்க” என்று அழைத்துச் சென்றார். மாலை ஏழு மணி. இருட்டு விழுந்திருக்க மங்கலான வெளிச்சத்துடனான பழைய கட்டிடம். நலந்தா மருத்துவமனையில் எந்தப் பரபரப்பும் இல்லை. டாக்டர் தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார். “அடடே, வாங்க” என்றவரின் முகம் முழுக்கச் சிரிப்பு. மேசையின் மீதிருந்த தாளில் கருப்பு மசியால் அவருடைய அழகான கையெழுத்தில் ஒரு அறிவிப்பு தயாராகிக்கொண்டிருந்தது. “ஈரோடு வந்துட்டீங்களாமே?” மகிழ்ச்சியுடன் விசாரித்தவர், பக்கத்தில் வைத்திருந்த அன்றைய நாளின் ஹிந்து செய்தித்தாளிலிருந்து […]