Tag: இதழ் 29

Editor's Picks

Editor’s Picks

கோகுல் பிரசாத் · March 28, 2021

ரிதுபர்னோ கோஷின் திரையுலகம் எங்கிருந்து தொடங்குவது என யோசித்தாலே விதிர்ப்புகொண்டு விடுகிறது உடல். ரிதுபர்னோ கோஷ் இந்தியத் திரையுலகின் பேரலை. செம்பவளங்கள் மீது நீர்த்தாரைகளை ஓயாது சொடுக்கிக்கொண்டே இருந்தவர். எனக்கோ நெளிந்தாடும் பொன்னிறத் துமிகளுள் பேரொளியில் துலங்குமொரு துமியை மட்டும் கண்டடைவது எங்ஙனம் எனும் தடுமாற்றம். The Last Lear படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சியை எடுத்துக்கொள்கிறேன். அந்தப் படத்தில் ப்ரீத்தி பிரபலமான நடிகை. அமிதாப் குறுங்குழுவால் மட்டுமே அறியப்பட்ட ஒரு நாடகக் கலைஞர். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் […]

சிறுகதை

மண்

கார்த்திக் பாலசுப்ரமணியன் · March 28, 2021

தூக்கம் வரவில்லை. இன்னவென்று இனம் காணவியலாத ஏதோ ஒன்று உள்ளே கிடந்து அழுத்தியது. மெதுநடை சென்று மனத்துள் ஒவ்வொரு அடுக்காக எடுத்துப் பிரித்துப் பார்த்தால் ஒருவேளை விடை கிடைக்கக்கூடும். அப்படி உள்ளே உற்றறிந்து அதிலிருந்து வெளியேறுவதற்கான சூழல் அங்கு வாய்த்திருந்தது. கூடாரத்திலிருந்து வெளியே வந்தேன். உள்ளே, மீராவும் வினுவும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஜனவரியில், அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் குளிரில் உறைந்து கொண்டிருக்கும்போது இங்கே ஆஸ்திரேலியாவில் கோடைக்காலம். ஆனாலும் நள்ளிரவு ஆதலால் நல்ல குளிர் இருந்தது. உள்ளே மாட்டியிருந்த […]

சிறுகதை

நத்திங்!

எம்.கே.மணி · March 28, 2021

தோட்டத்திற்குச் சென்று சேர்ந்ததும் பாக்கு இறக்கிக் கொடுக்கிறவர்களில் அவனைப் பார்த்துவிட்டேன். ஐயோ. “ரவி!” என்று வாய் முனகிவிட்டது. கணவர் அதைக் கவனிக்கவில்லை. மேலே வானை முட்டிவிடுவது போல முண்டிய மரத்தின் உச்சியில் இருந்த ஒருவன் மரத்தை வளையச் செய்து அடுத்த மரத்தைப் பற்றுவதை எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அண்ணாந்திருந்த ரவியை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். சந்தேகமில்லை, அவனேதான். எல்லோரும் விலகி நின்றார்கள். மேலே இருக்கிறவன் துண்டித்த குலைகள் வந்து விழுந்துகொண்டிருந்தன. அதை முடித்து மேலே இருக்கிறவன் அடுத்த கிளைக்குத் தாவினதும், கீழே […]

தமிழ்

முதலாளியம்மாவின் தங்கை – ம்போஸி கைம்பே (ஸாம்பியா நாட்டுக் கதை)

லதா அருணாச்சலம் · March 28, 2021

நான் வெளியே வெயிற் சூட்டில் வெந்துகொண்டிருக்க, வீட்டுப் பணிப்பெண் எலினா எப்போதும் போல முன் கூடத்தில் நல்ல நிழலான இடத்தில் நின்றுகொண்டிருந்தாள். கற்கள் பதிக்கப்பட்ட வாசற் தளத்தைப் பெருக்குவதில் மும்முரமாக இருந்தேன். வியர்வை கோடாக வழிந்து முதுகில் இறங்கியது. நாளின் முடிவில் அங்கு கொண்டுவந்து நிறுத்தப்படும் காரிலிருந்து கசிந்த எண்ணெய்த் துளிகள் அந்தக் கற்களின் மீது கோலம் போட்டிருந்தன. தண்ணீரும் சோப்பும் கலந்த கரைசலை விட்டு, தென்னம் விளாறுத் துடைப்பத்தால் நன்கு தேய்த்தும்கூட, அந்தக் கறைகள் விடாப்பிடியாக மறைய  மறுத்தன. அவை […]

கட்டுரை

தேர்தலைக் குறித்துச் சிந்திப்பது எப்படி?

ராஜன் குறை  · March 28, 2021

தமிழகம் தேர்தல் பிரச்சார அனலில் மூழ்கியிருக்கும்போது, மார்ச் 2021 இறுதி வாரத்தில் இந்தக் கட்டுரையைத் தமிழினிக்காக எழுதுகிறேன். ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல். இதில் என்னுடைய அரசியல் சார்புகள் குறித்தும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் எழுதப்போவதில்லை. அவற்றை மின்னம்பலம் வலைத்தளத்தில் வாராவாரம் திங்களன்று எழுதி வருகிறேன். அவற்றில் பல கட்டுரைகளை தி.மு.க நாளேடான முரசொலி மறுபிரசுரம் செய்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. அதனால் என் தேர்வினைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு கட்டுரைக்குள் சென்றுவிடுகிறேன். இந்தியத் […]

சிறுகதை

சப்தாவர்ணம்

சுஷில் குமார் · March 28, 2021

சுப்பிரமணியம் ஆசாரியின் கட்டிலில் அவரது கால்மாட்டில் தலைசாய்த்துக் கிடந்த பெரியவளின் அருகே வந்து நின்றாள் பாப்பாத்தி. மெல்ல அவளது தலைமீது கைவைத்து அழுத்தினாள். சட்டென பயந்து போனவளாய்த் திரும்பிப் பார்த்த பெரியவளின் கரிய முகமெங்கும் ஈரம். வாயோரத்தில் வழிந்த கோழையைத் துடைத்தவாறு அம்மாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவள், நிதானமாக எழுந்து கலைந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டை போட்டுக்கொண்டு அரங்கிற்குள் சென்றாள். கட்டிலின் கீழே சுருண்டு கிடந்தாள் சிறியவள். கொலுசுகளற்ற முழங்கால்களில் ஆறியும் ஆறாமலும் படர்ந்திருந்த சிரங்கு. […]

கட்டுரை

தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 4): கு.அழகிரிசாமியின் படைப்புகளில் குழந்தைகள்

மானசீகன் · March 28, 2021

கு.அழகிரிசாமி குழந்தைகளைப் பற்றி மட்டுமே சிறப்பாக எழுதிய எழுத்தாளர் என்கிற பிம்பம் தமிழ் வாசக மனதில் வலுவாக இடம்பிடித்திருக்கிறது. ‘அன்பளிப்பு’, ‘ராஜா வந்திருக்கிறார்’ ஆகிய கதைகளை வைத்து உருவாக்கப்பட்ட பிம்பம் இது. பலரும் இந்தக் கதைகளை மட்டுமே படித்தவர்கள் என்பதால் அந்தச் சித்திரத்தை கேள்விகளின்றி தம் மனதில் படியெடுத்துக்கொண்டனர். உண்மையில் அவருடைய பத்து கதைகளில் மட்டுமே குழந்தைகள் குறித்த சித்திரிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். அவருடைய குழந்தை பற்றிய பெரும்பாலான கதைகளுக்கு மரபிலும் நவீனத்துவப் படைப்புலகிலும் முன்னோடிகளே […]

கட்டுரை

இரு சிலுவைகளின் உலகம் – தஸ்தாயேவ்ஸ்கியின் ‘அசடன்’ குறித்து

பாலாஜி பிருத்விராஜ் · March 28, 2021

முதல்முறையாக உலக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொள்ளும் ஒரு தமிழ் வாசகன் சந்திக்க நேரும் முதல் பெயராக தஸ்தாயேவ்ஸ்கி இருக்கக்கூடும். எந்தவொரு தமிழ் எழுத்தாளரின் படைப்புகளுக்கு இணையாகவும் அவர் படைப்புகளைப் பற்றி இங்கு எழுதப்பட்டிருக்கின்றது. அதற்கு காரணங்களில்லாமல் இல்லை. அவர் இங்கு பரவலாக அறிமுகம் செய்யப்பட்ட காலம் என்பது நவீனத்துவம் மேலோங்கி இருந்த காலம். அசோகமித்திரனும், ஜி.நாகராஜனும், ஆதவனும் செல்வாக்கு செலுத்திய காலம். இயல்பாக அவர்கள் முன்வைத்த உலகிற்கு நெருக்கமாக இருந்தது தஸ்தாயேவ்ஸ்கியின் உலகம். நற்குணங்கள் அற்றவர்களை கதைமாந்தர்களாகக் கொண்டவை அவரது […]

கட்டுரை

இந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு

ஆர்.அபிலாஷ் · March 28, 2021

ஐம்பது பில்லியன் வளர்ச்சியுடன் இந்த ஆண்டு அதானி உலகப் பணக்காரர்களில் முதலிடத்தை எட்டிவிட்டார். இத்தனைக்கும் கடந்த இரு பத்தாண்டுகளில் மட்டும் அவர் அடைந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சி இது. கௌதம் அதானி பரம்பரைப் பணக்காரர் அல்ல. அவர் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. குஜராத்தில் வைரம் வெட்டும் தொழிலில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டு, தன் சகோதரர் நடத்திய சிறிய பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இணைந்துகொண்டார். அதன் பிறகு அங்கே இங்கே பிடித்து அரசியல் தொடர்புகளை உருவாக்கி, […]

கட்டுரை

மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 8): ராஜாவின் கவிஞர்கள்

ஆத்மார்த்தி · March 28, 2021

மனித வாழ்வில் இசையின் பங்கு அளப்பரியது. நிஜத்துக்கும் கனவுக்கும் இடையிலான உப கண்ணிகளை நிரப்பித் தருவதில் இசைக்கு முக்கிய இடமுண்டு. மனிதன் தன் கனவைத் திரும்பத் திரும்பத் தொடர்புறுவதற்கான சாதனமாக இசை மீதான பற்றுதல் விளங்குகிறது. இசையைத் தன் கனவுகளின் அடுத்தடுத்த சித்திரங்களாக எண்ணிக்கொள்வது இரசனையின் விளைவாகக் கிடைக்கிற நல்லீடு. நிலம், காலம், சூழல், கதை மாந்தரின் தன்மை, வாழ்க்கை அனுபவம், கதை பாடலோடு பொருந்தி நிற்கிற புள்ளியிலிருந்து பாடல் நிறைவடைகிற புள்ளி வரையிலான கதா நகர்வு, […]

தமிழ்

எழுத்தில்லாப் பலகை – எட்கர் கீரத்

செங்கதிர் · March 28, 2021

துயரமான பசுமாடு அ-வுக்கு ஒரு கனவு மீண்டும் மீண்டும் வந்தது. கிட்டத்தட்ட எல்லா நாளும் அக்கனவைக் கண்டான். ஆனால் விடிகாலையில் நல்லவரோ வேறு ஆசிரியர்களோ எழுப்பி அவன் கண்ட கனவு ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்டால், உடனேயே இல்லை என்றுதான் மறுப்பான். அதற்கு அர்த்தம் அக்கனவு பயமுறுத்துவதாலோ தர்மசங்கடப்படுத்துவதாலோ அல்ல. அந்த முட்டாள்தனமான கனவில் அவன் புல்மேவிய குன்றின் உச்சியில் ஓவியச் சட்டகத்தின் முன்னால் நின்றுகொண்டு மேய்ச்சல் நிலக்காட்சியின் நீர்வண்ண ஓவியத்தை வரைந்துகொண்டிருந்தான். கனவில் வரும் நிலக்காட்சி […]

தமிழ்

தஸ்தாயேவ்ஸ்கி பற்றி நபக்கோவ்

கோ.கமலக்கண்ணன் · March 28, 2021

தஸ்தாயேவ்ஸ்கி பற்றிய என் நிலைப்பாடு ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கும் அதே சமயம் ஏற்கக் கடினமானதாகவும் இருக்கிறது. என் அத்தனை இலக்கிய விரிவுரைகளிலும் இலக்கியத்தில் நான் பொருட்படுத்தும் ஒரேயொரு பண்பைத் தவறாமல் தொடர்ந்து முன்வைத்து வருகிறேன். கலைச்செயல்பாட்டின் நோக்கமும் தனியரின் மேதமையுமே அவை. இந்த அடிப்படையில் தஸ்தாயேவ்ஸ்கி ஒரு சிறந்த எழுத்தாளர் அல்ல, மாறாக ஒரு சாதாரணமான எழுத்தாளர். ஆங்காங்கே அரிதாக நகைச்சுவை வெளிப்பாடு இருந்தபோதும் இலக்கியத் தளத்தில் வெறுமை நிரம்பிய படைப்பாளர் அவர். ’குற்றமும் தண்டனையும்’ நாவலில் ரஸ்கோல்நிகோவ் […]