Tag: எம்.கோபாலகிருஷ்ணன்

சிறுகதை

வாசனை

எம்.கோபாலகிருஷ்ணன் · April 25, 2021

கதவைத் திறந்ததும் புழுங்கலான வாடையுடன் காற்று வெளியேறியது. சிக்குப்பிடித்த எண்ணெயும் கெட்டுப்போன உணவுப் பண்டமும் அழுக்கும் சேர்ந்த நாற்றம். சோர்வுடன் கண்களை மூடியபடி தலையை அப்படியே சுவரில் சாய்த்து நின்றான். யாருமற்ற வீட்டின் நிச்சலனமும் வெறுமையும் எதிரில் இருளென நின்றிருந்தது. மூலையிலிருந்த ஸ்விட்சை எட்டிப் போட்டான். வெளிச்சம் பரவிய நொடியில் தரையில் கரப்பான்கள் வெருண்டோடின. அங்கும் இங்குமாய்ப் பதுங்க இடம் தேடி விரைந்தன. எச்சரிக்கையுடன் கால்வைத்து உள்ளறைக்கு வந்து விளக்கைப் போட்டான். கூடவே மின்விசிறியையும். சுழலத் தொடங்கிய […]

கட்டுரை

டாக்டர் ஜீவா – சில நினைவுகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · March 28, 2021

‘ரிஷ்யசிருங்கர்’ எனும் ஈரோடு ராஜேந்திரன் “டாக்டரைப் பாக்கலாம் வாங்க” என்று அழைத்துச் சென்றார். மாலை ஏழு மணி. இருட்டு விழுந்திருக்க மங்கலான வெளிச்சத்துடனான பழைய கட்டிடம். நலந்தா மருத்துவமனையில் எந்தப் பரபரப்பும் இல்லை. டாக்டர் தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.  “அடடே, வாங்க” என்றவரின் முகம் முழுக்கச் சிரிப்பு. மேசையின் மீதிருந்த தாளில் கருப்பு மசியால் அவருடைய அழகான கையெழுத்தில் ஒரு அறிவிப்பு தயாராகிக்கொண்டிருந்தது.  “ஈரோடு வந்துட்டீங்களாமே?” மகிழ்ச்சியுடன் விசாரித்தவர், பக்கத்தில் வைத்திருந்த அன்றைய நாளின் ஹிந்து செய்தித்தாளிலிருந்து […]

தமிழ்

தீர்த்த யாத்திரை

எம்.கோபாலகிருஷ்ணன் · December 22, 2020

வியாழக்கிழமை கண்விழித்தபோதே பயம் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. சுப்ரபாதம் சன்னமாக ஒலித்திருந்தது. அம்மா வழக்கம்போல விடிகாலையிலேயே தலைகுளித்து, கோலமிட்டு, பூஜையில் உட்கார்ந்திருந்தாள். கையில் விளக்குடன் நின்ற சின்னக்காவைக் கண்டதும் படபடப்பு கூடியது. சங்கரி கிளம்பியிருப்பாளா?    ஒரு மாதமாய்ப் பேசி, விவாதித்து, சண்டைபோட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவான திட்டம். காலையில் பத்து மணிக்கெல்லாம் சிவன்மலை அடிவாரத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. அங்கிருந்து மலையேறி கோயிலுக்குப் போவது, மாலை மாற்றி தாலி கட்டிக்கொள்வது என்றும் முடிவு. அதன்பிறகு கரூர் வரைக்கும் பேருந்துப் […]

கட்டுரை

தமிழ்ச் சிறுகதை இன்று: புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் – சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · July 20, 2020

‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் எட்டாவது பகுதி இது. * சுனில் கிருஷ்ணன் ஒரு சிறுகதையாளராக அல்லாமல் ‘இன்றைய காந்தி’ தளத்தின் வழியாக இளம் காந்தியராக அறிமுகமானவர் என்பதால் அவருடைய கதைகளை முதலில் கவனிக்கவில்லை. ‘அம்புப் படுக்கை’ தொகுப்பும் சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஷ்கார்’ விருதும் அவர் மீது குவித்த வெளிச்சத்தின் பிறகே கதைகளை வாசிக்கலானேன். முதன்முதலாக நான் வாசித்த, கணையாழி போட்டியொன்றில் பரிசு வென்ற ‘பேசும் பூனை’ பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. அந்த வியப்பே […]

சிறுகதை

அமைதி என்பது… – எம். கோபாலகிருஷ்ணன்

எம்.கோபாலகிருஷ்ணன் · June 16, 2020

பாதையை மறைத்துப் படர்ந்திருந்தது பனிமூட்டம். ஓரடிக்கும் அப்பால் அனைத்தும் உறைந்த காட்சிகளாகவே தென்பட்டன. சருமத்தை ஊடுருவிய குளிரில் நடுங்கி நின்றேன். வலதுபக்கமாய் ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் நீண்ட கட்டடம். சுவரையொட்டிய அடர்ந்த புதர்களில் நனைந்த டேலியா பூக்கள். இலைகளில் ஈரம். கட்டடத்துக்குப் பின்னால் நெருப்பைக் கண்டதும் அருகில் விரைந்தேன். தரையில் கிடந்த சுள்ளிகளையும் கட்டைகளையும் தாண்டி நின்றேன். தீயின் கதகதப்பு குளிரை விரட்டியது. அடுப்பில் விறகு எரிந்து கொண்டிருந்தது. பையை ஓரமாக வைத்து விட்டு தீயில் கைகளைக் காட்டி […]

கட்டுரை

தமிழ்ச் சிறுகதை இன்று – இருண்ட வானில் ஒளிரும் நட்சத்திரங்கள்: கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · June 16, 2020

‘தமிழ்ச் சிறுகதை இன்று’ கட்டுரைத் தொடரின் ஏழாவது பகுதி இது. தூயனில் தொடங்கி சுரேஷ் பிரதீப், சித்துராஜ் பொன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, ராம் தங்கம், அனோஜன் பாலகிருஷ்ணன் ஆகியோரது சிறுகதைகளைப் பற்றி எழுதியதைத் தொடர்ந்து கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் கதைகளைக் குறித்து வெளியாகிறது இந்தப் பகுதி. * எழுதுவதும் வெளியிடுவதும் பதிப்பிப்பதும் இன்று மிகச் சுலபமான காரியங்கள். இணைய இதழ்களின் வழியாக உலகளாவிய வாசக கவனிப்பையும் பெற முடிகிறது. இரண்டாயிரத்தில் நாவல்கள் பெரும் வீச்சில் எழுதப்பட்ட போது சிறுகதைகளின் மீதான […]

கட்டுரை

போரும் காமமும்: அனோஜன் பாலகிருஷ்ணன் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · May 16, 2020

மண்ணுக்கும் பெண்ணுக்குமான இச்சையே மனித வாழ்வைச் செலுத்தும் இரு புள்ளிகள். பிற உயிர்களைப் போல இயற்கையின் ஒரு பகுதியாக இருந்த மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திய எல்லைகளை அறிவின் திறத்தால் கடந்து வெகுதூரம் வந்துவிட்ட போதிலும் ஆதாரமான அந்த இரண்டு விசைகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. உண்மையில் அவ்விரு விசைகளே இத்தனை தொலைவு அவனைச் செலுத்திக்கொண்டு வந்துள்ளன. இன்றைய மனித வாழ்வின் அனைத்து சாதனைகளையும் முன்னேற்றங்களையும் நவீன அடையாளங்களையும் பகுத்துக்கொண்டே சென்றால் அவற்றின் ஆழத்தில் எஞ்சி நிற்பது இந்த […]

கட்டுரை

தமிழ்ச் சிறுகதை – இன்று: கலையும் வண்ணங்களும் மறையும் காட்சிகளும் – கிருஷ்ணமூர்த்தியின் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · April 14, 2020

தூயனின் சிறுகதைகள் குறித்த முதல் பகுதியையும், சுரேஷ் பிரதீப்பின் சிறுகதைகளைக் குறித்த இரண்டாவது பகுதியையும் சித்துராஜ் பொன்ராஜ் கதைகள் பற்றின மூன்றாவது பகுதியையும் ராம் தங்கம் சிறுகதைகளைக் குறித்த நான்காவது பகுதியையும் தொடர்ந்து ஐந்தாவதாக இப்பகுதி கிருஷ்ணமூர்த்தியின் கதைகளைக் குறித்தது. இந்த வரிசை தகுதியின் அடிப்படையிலானது அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும். தொகுப்புகளை வாசித்த பின் எழுதிய குறிப்புகளின் அடிப்படையில் அவ்வப்போது எழுதப்பட்டவை. அவ்வளவே. * நூற்று இருபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ்ச் சிறுகதையில் இனியும் புதிதாய் சொல்ல […]

கட்டுரை

உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம் : ‘திருக்கார்த்தியல்’ – ராம் தங்கம்

எம்.கோபாலகிருஷ்ணன் · February 24, 2020

குழந்தைகளின் வசீகரமான உலகை எழுதிப் பார்க்கும் ஆர்வம் எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என தமிழின் சிறுகதை முன்னோடிகள் பலரும் குழந்தைகளின் உலகை கதைகளில் எழுதிக் காட்டியுள்ளனர். அதிலும் கு.அழகிரிசாமியின் கதைகள் நமக்குக் காட்டும் சிறுவர்களின் உலகம் உயிர்ப்புமிக்கது. ‘உழைக்கும் சிறுவர்கள்’ தமிழ் இலக்கியத்துக்கு புதியவர்கள் இல்லை. தி.ஜாவின் ‘சிலிர்ப்பு’ கதையின் காமாட்சியையும், ‘சாப்பாடு போட்டு பத்து ரூபாய்’ கதையின் அக்கணாகுட்டியையும் உதாரணமாகச் சொல்லலாம். இதன் தொடர்ச்சியாக அண்மையில் நம்பிக்கை […]

கட்டுரை

தமிழ்ச் சிறுகதை இன்று: நடுவில் இருக்கும் கடல் – சித்துராஜ் பொன்ராஜ் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · January 24, 2020

சமகால தமிழ்ச் சிறுகதைகளில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் எழுதி வரும் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைத் தொடர் இது. தூயன், சுரேஷ் பிரதீப் ஆகியோரது கதைகளைத் தொடர்ந்து வெளியாகும் மூன்றாம் பகுதி. * உலகெங்கிலும் மனித வாழ்வுக்கென பொதுவான அம்சங்கள் சில உண்டு. அவையல்லாமல் நிலம், மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம் போன்ற எல்லைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் பொருட்டு உருவாகும் தனித்துவமான சில அம்சங்களே அயல்நில வாழ்வை உற்று நோக்கச் செய்கின்றன. அவ்வாறான தனித்துவமான குணாம்சங்களை சுட்டிக் காட்டுபவையே […]

கட்டுரை

தமிழ்ச் சிறுகதை – இன்று: அன்னையின் சித்திரங்களும் சாதியின் முகங்களும் – சுரேஷ் பிரதீப் சிறுகதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · December 26, 2019

சமகால தமிழ்ச் சிறுகதைகளில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் எழுதி வரும் சிறுகதை எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரையின் இரண்டாவது பகுதி இது. சென்ற பகுதி தூயனின் கதைகளைப் பற்றி அமைந்திருந்தது. ‘ஒளிர் நிழல்’ நாவலின் வழியாக தமிழ்ச் சூழலில் கவனம் பெற்ற சுரேஷ் பிரதீப் தொடர்ந்து ஊக்கத்துடனும் தெளிவுடனும் எழுதி வரும் இளம் எழுத்தாளர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பு வெளியாகியுள்ளன. அவரது சிறுகதைகளைக் குறித்தது இந்த இரண்டாம் பகுதி. பதினைந்து கதைகளைக் கொண்ட […]

கட்டுரை

பருவ மழையுடன் ஒரு பயணம்

எம்.கோபாலகிருஷ்ணன் · December 26, 2019

அலெக்ஸாண்டர் ஃபிரேடர் புகழ்பெற்ற பயண எழுத்தாளர். லண்டனில் வசிப்பவர். இம்பீரியல் ஏர்வேஸின் பாதையைத் தொடர்ந்து எழுதிய ‘Beyond the Blue horizon’ நூலும் நில நடுக்கோட்டு நாடுகளில் பயணம் செய்து எழுதிய ‘Tales from the Torrid Zone’ புத்தகமும் புகழ்பெற்றவை. சிறுவனாக இருந்த போது அவரது படுக்கையருகே ஒரு ஓவியம் தொங்க விடப்பட்டிருந்தது. அடர்ந்த புற்களுடன் கூடிய மலைச் சரிவுகள், முகடுகளில் சிறிய கோபுரங்களுடனான கோயில்கள், புலிகளை நோக்கி ஓங்கிய ஈட்டிகளுடன் நிர்வாண கோலத்தில் வேட்டையர்கள் […]