Tag: எம்.கோபாலகிருஷ்ணன்

தமிழ்

உயிர்க்கருணையின் பேரியக்கம்: வி.அமலன் ஸ்டேன்லியின் ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’

எம்.கோபாலகிருஷ்ணன் · July 1, 2023

பேரியற்கையின் முன் மனிதனும் ஓர் உயிர். பிரபஞ்சத்தின் எண்ணற்ற சிறிதும் பெரிதுமான உயிர்களுக்கு நடுவே அவனும் ஓர் உயிர்தான். என்றாலும் ஆற்றல் மிகுந்தவன். பகுத்தறிவு மிக்கவன். எனவே, பிற உயிர்களைக் காட்டிலும் மேன்மையுடனும் கூடுதல் மகிழ்ச்சியுடன் நிறைவுடன் வாழும் வாய்ப்பைப் பெற்றவன். ஆனால், உண்மையில் பிற அனைத்து உயிர்களைக் காட்டிலும் அதிகமும் துன்புறுவதும் அலைக்கழிந்து அல்லலுறுவதும் அவனன்றி வேறு எதுவுமில்லை. அறிவின் துணைகொண்டு நோய்களுக்கான காரணிகளைக் கண்டறிந்து நீளாயுளுடன் வாழ்வதைச் சாத்தியமாக்கியிருக்கிறான். அண்டமளக்கிறான். அணுவைத் துளைக்கிறான். காலம் […]

தமிழ்

வேங்கை வனம்

எம்.கோபாலகிருஷ்ணன் · December 27, 2022

ஜுன், 2003.    கோடையின் கோரத் தாண்டவத்துக்குக் காடு பலியாகியிருந்தது. எங்கும் வறட்சி. பெயருக்குக்கூடப் பச்சையைப் பார்க்க முடியவில்லை. இலைகளின்றி வெறும் கூடுகளைப்போல் காய்ந்த கிளைகளும் சுள்ளிகளுமாய் நின்ற மரங்களைப் பார்க்கச் சகிக்கவில்லை. சோர்வை விதைக்கும் சாம்பல் நிறத்தில் பரிதாபமாய் நின்றது காடு. மழையைக் கண்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. ரந்தம்பூரின் தடாகங்கள் பலவும் நீரின்றிப் பாளம்பாளமாக வெடித்துக் கிடந்தன. கரையில் நின்ற புற்கள் காய்ந்து மடிந்தன. ஈரமற்ற நிலத்தில் எதுவும் நிலைக்கவில்லை. நூற்றுக்கணக்கான மான்கள் திரிந்திருக்கும் தடாகங்களில் […]

கட்டுரை

இராசேந்திர சோழனுக்கு விளக்கு விருது

எம்.கோபாலகிருஷ்ணன் · December 27, 2022

அனைவருக்கும் வணக்கம். விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருதை இன்று பெருமைப்படுத்தியிருக்கும் மதிப்பிற்குரிய இராசேந்திர சோழன், வண்ணநிலவன் இருவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கும் புனைவு சாராத பிற துறைகளிலும் பெரும் பங்களித்து வரும் எழுத்தாளர்களைத் தொடர்ந்து கௌரவித்து வரும் விளக்கு அமைப்புக்கு பாராட்டுகள். * ‘என் வாழ்க்கையே நான் விடுக்கும் செய்தி’ என்றார் காந்தி. ஒரு மனிதனின் வாழ்வே அவன் இந்தச் சமூகத்துக்கு விட்டுச்செல்லும் செய்தியாக இருக்கமுடியும். ஒரு மனிதன் எழுத்தாளனாக இருந்திருக்கலாம். அரசியல்வாதியாக […]

தமிழ்

நீரின்றி அமையாது உலகு: மனைமாட்சி நாவல்

மானசீகன் · October 10, 2022

தமிழில் எழுதப்பட்ட வெகுஜன நாவல்களும் திரைப்படங்களும் ‘குடும்பம்’ என்கிற அமைப்பைத் தொடர்ந்து புனிதமான ஒன்றாகவே சித்தரித்தன. கதாபாத்திரங்களின் காமத் தத்தளிப்புகளை உக்கிரமாகப் பேசிய தி.ஜா, பாலகுமாரனின் நாவல்கள் காம, மோக, குரோதங்களில் இருந்து விடுபடுவதற்கான மீட்சி தரும் அம்பிகையெனக் கூட்டுக்குடும்பத்தின் புனிதத்தையே கட்டமைத்தன. 2015-ல் வெளிந்த ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படமானது திருமணமின்றி சேர்ந்து வாழும் (Living Together) நவயுக இளைஞர்களின் கொண்டாட்டத் தருணங்களை ஒப்புக்குக் காட்டிவிட்டு அவ்வுறவு உருவாக்கும் வெறுமைக்கு மாற்றாக நம் மரபான குடும்ப […]

தமிழ்

தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 14): புதிய தலைமுறை பெண்களின் சவால்கள் – லாவண்யா சுந்தரராஜனின் கதைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் · October 10, 2022

அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பரின் சொந்த ஊர் திருச்சிக்குச் செல்லும் நெடுஞ்சாலையை அடுத்திருக்கும் ஒரு கிராமம். மனைவியும் அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் பட்டதாரிகள். ஒருநாள் மாலை புதிதாக வாங்கிய உடைகளை என் மனைவியிடம் காட்டிக்கொண்டிருந்த நண்பரின் மனைவி சிரித்தபடியே சொன்னார். “சுடிதார், நைட்டியெல்லாம் இங்கதான். ஊருக்குப் போனா ஸாரி மட்டுந்தான் கட்டமுடியும்.” கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் நண்பரின் மகள் தோளைக் குலுக்கியபடியே சிரித்தாள். “ஊருக்குன்னு தனி […]

கட்டுரை

மணலாய் உதிரும் பாவனைகள்: எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மணல் கடிகை’

மானசீகன் · August 30, 2022

‘யதார்த்தவாதம்’ என்கிற வடிவம் நாவல்களுக்கு உகந்தது. குறிப்பாக, புறச்சூழல் சார்ந்த சித்திரிப்புகளை உருவாக்குவதே பல யதார்த்தவாத நாவல்களின் பண்பாக இருந்து வருகிறது. ஆனால் ‘மணல் கடிகை’ அகச் சித்திரிப்பில் பெருவெற்றியடைந்த நாவல். நாவலில் நிகழும் புறவயமான நிகழ்வுகளையும்கூட வரலாற்று முரணியக்கமாக அணுகாமல் மனிதர்களுடைய அகத்தின் நீட்சியாகவே கோபாலகிருஷ்ணன் படைத்திருக்கிறார். ஐந்து கதாபாத்திரங்கள்: ஒரு நேர்காணலில் எம்.கோபாலகிருஷ்ணன் தனக்குப் பிடித்த நாவலாசிரியர் ‘தஸ்தாயேவ்ஸ்கி’ என்று கூறியதை வாசித்திருக்கிறேன். இந்த நாவலில் சந்தேகமேயின்றி கரமசோவ் சகோதரர்களின் பாதிப்பு உண்டென்றே நான் […]

கட்டுரை

தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 13): வேறு நிலம், வேறு முகம், ஒன்றே வலி – கனகலதாவின் சீனலட்சுமி

எம்.கோபாலகிருஷ்ணன் · August 30, 2022

கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் ‘சமகாலப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்’ குறித்து உரைநிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டதையடுத்து ஏற்கெனவே வாசித்த சில சிறுகதைகளையும் புதிய சிறுகதைகளையும் தேடிப் படிக்க வாய்த்தது. அயலகச் சிறுகதையாளர்கள் சிலரது கதைகளையும் இணையத்தின் வழியே தேடிப் படிக்க முயன்றேன். ‘அறை’ என்ற ஒரு சிறுகதை கண்ணில்பட்டது. வீட்டில் நிகழ்ந்திருக்கும் ஒரு மரணம் அங்கே தங்கியிருக்கும் பெண்ணுக்குள் ஏற்படுத்தும் மனவோட்டங்களை மையமாகக்கொண்டது அந்தக் கதை. சாவு வீட்டின் சூழலில் அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஒருவர் சந்திக்க நேரும் உளச்சிக்கல்களைத் […]

தமிழ்

தமிழ்ச் சிறுகதை இன்று (பகுதி 12): நிலமும் திரையும்- செந்தில் ஜெகன்நாதனின் மழைக்கண்

எம்.கோபாலகிருஷ்ணன் · July 25, 2022

ஈரோடு நண்பர் குமரன் எனக்கு அறிமுகமானது இருபதாண்டுகளுக்கு முன்பு. சென்னையிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தார். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய ராஜேந்திரன் ‘அஜித்துக்கு கதை சொல்லிருக்காரு’ என்று மிதப்புடன் சொன்னது நினைவிலிருக்கிறது. சினிமாவுடன் தொடர்புடைய நபரை முதன்முதலாகச் சந்தித்தது அப்போதுதான். சினிமாவைவிட சினிமாவின் உருவாக்கம் குறித்த தகவல்கள் எப்போதும் ஆர்வமூட்டுபவையாக இருந்த ஒரு பருவம். அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதுபோல அடங்கிய குரலில் புன்னகைத்தபடியே பேசிக்கொண்டிருந்த குமரனை இரண்டு மாதம் கழித்து ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்தபோது சற்றே […]

சிறுகதை

எங்கிருந்தோ வந்தான்

எம்.கோபாலகிருஷ்ணன் · April 25, 2022

மீண்டும் ஒரு முறை புனேவுக்குச் செல்ல வேண்டியாகிவிட்டது. இந்த வருடத்தில் இது நான்காவது முறை. இந்த முறை இந்தப் பயணத்தை எப்படியாவது தவிர்த்துவிடப் பார்த்தும் இயலவில்லை. வண்டியில் ஏறிய நிமிடத்திலிருந்து இதற்கு முந்தைய பயணம் எனக்குத் தந்த அனுபவத்தின் பாரம் என்னை அமைதியிழக்கச் செய்தபடியே இருந்தது. உள்ளே செல்லாமல் வாசலில் நின்றபடியே பகலைக் கழித்துவிட முடியும். ஆனால் இன்றைய இரவு என்னை என்ன செய்யப் போகிறதோ என்கிற பயம் இப்போதே எனக்குள் நிறைந்திருந்தது. தர்மாவரத்திலேயே ஏதாவது ஒரு […]

தமிழ்

ஓசியானின் பாடல்கள் – கதே

எம்.கோபாலகிருஷ்ணன் · April 25, 2022

ஓசியானின் கவிதை (Ossian) கதேயைப் பெரிதும் பாதித்திருப்பதை “The Sorrows of Young Werther” நாவலின் போக்கில் நம்மால் உணரமுடியும். ஓசியான் ஒரு ஐரிஷ் கவிஞர். போர் சாகசங்களையும் வீர மரணங்களையும் குறித்துப் பெருமளவு பாடிய இவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக் கவிஞர் என்று கருதப்படுகிறார். ஸ்காட்லாந்தின் கெய்லிக் என்ற புராதன மொழியில் எழுதப்பட்டிருந்த இவருடைய கவிதைகளைக் கண்டுபிடித்து உலகிற்குத் தந்தவர் ஸ்காட்லாந்தின் பிரபல கவிஞர் ஜேம்ஸ் மக்பெர்சன் (James Macpherson) ஆவார். 1760ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் […]

சிறுகதை

ஒத்தைத் தறி முதலியார்

எம்.கோபாலகிருஷ்ணன் · February 24, 2022

கண்ணகி நகர் காலை நேரப் பரபரப்பில் இருந்தது. மணி எட்டரையைத் தொட்டிருந்தது. கம்பெனிகளில் தையல் மெஷின்களின் ஓசை தொடங்கிவிட்டது. போரிங் டேங்கில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தவர்களின் கவனத்தை அந்தக் கார்களின் வரிசை சில நிமிடங்கள் ஈர்த்தது. வரிசையாக ஏழு கார்கள் 60 அடி சாலையிலிருந்து போரிங் டேங்க் அருகில் வந்து தயங்கின. இரண்டு லேன்சர்கள், ஒரு சைலோ, இரண்டு டவேராக்கள், இன்னும் இரண்டு ஐ10கள். முன்னால் இருந்த டவேரா மெல்ல மேற்கு நோக்கித் திரும்பி ஒத்தைத் தறி முதலியார் […]

தமிழ்

காதலின் துயரம் – கதே

எம்.கோபாலகிருஷ்ணன் · February 24, 2022

இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் கைகளைப் பற்றினான். கண்களிலும் நெற்றியிலும் வைத்து அழுத்திக்கொண்டான். அதிர்ச்சிகரமான அவனது துயர முடிவைக் குறித்த உள்ளுணர்வு அவளது மனத்தில் பளிச்சிட்டது. அவளது மூளை குழம்பியது. அவனது கைகளை இறுகப் பற்றித் தன் மார்பின் மீது வைத்து அழுத்திக்கொண்டாள். துயரப் பெருமூச்சுடன் அவனைத் தழுவினாள். தகிக்கும் இருவரது கன்னங்களும் உரசின. உலகத்தை மறந்தனர். அவளைக் கைகளால் பின்னித் தன் […]